தங்கத்தைக் கடத்தி வந்த சிங்கப்பூரரை திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சுற்றிவளைத்து பிடித்தனர் சுங்கத்துறை அதிகாரிகள்.
பெண் கால்களை இழக்க காரணமாக இருந்த ஓட்டுநருக்கு சிறை, வாகனமோட்ட தடை
மார்ச் 17- ஆம் தேதி அன்று பயணிகளுடன் சிங்கப்பூரில் இருந்து புறப்பட்ட இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 6E 1008 என்ற எண் கொண்ட விமானம், திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.
அந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை திருச்சி மண்டல சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, சக்கர நாற்காலியில் வந்த நபரை சந்தேகத்தின் அடிப்படையில் அதிகாரிகள் சோதனை நடத்தியதில் அதிர்ச்சி காத்திருந்தது.
அந்த நபர் 24 கேரட் 330 கிராம் சுத்தமான தங்கத்தையும், 22 கேரட் 80 கிராம் தங்கத்தையும் கடத்தி வந்தது தெரிய வந்தது. கடத்தல் தங்கத்தின் மொத்தம் மதிப்பு ரூபாய் 26.62 லட்சம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன், கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
‘பங்குனி உத்திரம் 2024’- ஸ்ரீ சிவ கிருஷ்ண ஆலயத்தில் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு!
முதற்கட்ட விசாரணையில், அந்த பயணி சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.