இந்திய ரூபாயில் சப்போர்ட் லெவல் ரூ.95,450–ரூ.95,080ஆகவும், ரெசிஸ்டென்ஸ் ரூ.96,750–ரூ.97,290ஆகவும் உள்ளது. புதிய அழுத்தம் அல்லது பதற்றங்கள் ஏற்பட்டால் தங்கத்தின் விலை மீண்டும் உயரக்கூடும்” என்று ஆக்மாண்டின் ஆராய்ச்சித் தலைவர் டாக்டர் ரெனிஷா சைனானி கூறினார். “தங்கத்தின் விலைகள் $3,380 (சுமார் ரூ.96,400-க்கு மேல்) சென்றால், அவை $3,435 (சுமார் ரூ.97,400) நோக்கி நகரக்கூடும், மேலும் $3,500 (சுமார் ரூ.99,400) வரையிலும் எட்டக்கூடும்” என்று அவர் மேலும் கூறினார்.


