இந்தியாவைப் பொறுத்தவரையில் தங்கத்தின் பயன்பாடு என்பது அதிகஅளவிலிருந்து வருகிறது. முக்கியமாகக் காதுகுத்து , கல்யாணம் உள்ளிட்ட விசேஷ நிகழ்வுகளுக்குத் தங்க நகைகளை உறவினர்களுக்கு அளிப்பதை வழக்கமாக்கி வருகின்றனர். தங்கம் அணிவதற்குப் பயன்படுத்துவதை விட அதனை அடகு வைத்துப் படிப்பு செலவு,மருத்துவச் செலவு உள்ளிட்ட அவசரக் காலங்களில் அடகு வைத்துஅந்த சூழலிலிருந்து மீளப் பல குடும்பங்களுக்குத் தங்கம் பயனுள்ள ஒரு இன்வெஸ்ட்மென்ட் பொருளாக இருந்து வருகிறது.
தங்கத்தின் விலையில் அவ்வப்போது சிறிய அளவிலான தொகைகள் ஏற்றம் , இறக்கம் இருந்து வரும். ஆனால் சமீபகாலமாகத் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயரும் செய்திகளையும் பார்த்து வருகிறோம். அதிலும் இந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. கிராமிற்கு ரூ.10-100 வரை ஏற்றம், இறக்கம் இருந்து வந்த நிலையில் திடீரென ரூ.1500 வரை விலை ஏறியுள்ளது. இதற்கு என்ன காரணம்? தங்கத்தின் விலை மீண்டும் பழைய நிலைக்கு வருமா? என்பது குறித்து தஞ்சாவூர் வணிகர் சங்க பேரவைத் தலைவர் வாசுதேவன் கூறியதைப் பார்க்கலாம்.
வரலாறு காணாத நிகழ்வு:
கடந்த இரண்டு மாதமாக ரூ.5800 ரூபாய் இருந்த ஒரு கிராம் தங்கத்தின் விலை தற்போது ரூ.6500-6800 வரை அதிகரித்துள்ளது. அதாவது ரூ.46000 விற்ற ஒரு பவுன் தற்போது ரூ.52000-தை தொட்டுள்ளது. கிட்டத்தட்ட ஒரு மாதத்தில் ஒரு பவுனுக்குரூ.6 ஆயிரம் வரை விலை அதிகரித்துள்ளது. இது வரலாறு காணாத நிகழ்வு என்றே சொல்லலாம்.
இதையும் வாசிக்க: சாலை ஓரத்தில் கிடைக்கும் வெள்ளூமத்தை – காசாக மாறியது எப்படி…
தங்கம் விலை ஏற்றம் காரணமாக வாங்கும் தன்மை பொது மக்களிடையே குறைந்து வருகிறது. இது பெரிதளவில் சாமானிய மக்களைப் பாதிக்கிறது. கல்யாணம் காது குத்து உள்ளிட்ட விசேஷ நிகழ்வுகளில் 10 பவுன் நகை வாங்கும் இடத்தில் தற்போதுஆறு பவுன், ஏழு பவுன் வாங்க வேண்டிய சூழலில் மக்கள் இருக்கின்றனர்.உலக நாடுகள் தங்கத்தில் அதிகம் முதலீடுவைக்கின்றனர்.அதிலும் சைனா போன்ற நாடுகள் நகைகளை வாங்கி குவிக்கின்றனர்.
டாலரின் ஏற்றம் இறக்கம்:
பொதுவாகத் தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்படுவது எப்படி என்றால், தங்கத்திற்கு என்று ஒரு விலை இருக்கிறது.
கடந்த 2015 ஆம் ஆண்டிலிருந்து பார்த்தோம் என்றால், ஒரு கோல்டின்விலை ஆயிரம் டாலராக இருந்தது. அப்படியே படிப்படியாக உயர்ந்தது.கொரோனாவிற்கு முன்பு வரை $.1700 ஆக இருந்த தங்கத்தின் டாலர்கள் அதன் பிறகு 2021, 2022 , 2023 இந்த மூன்று ஆண்டுகளில் தங்கத்தின் டாலர் விலை$.2000-2100 வரை எட்டியது. தற்போது தங்கத்தின் விலை 2300 டாலராக உயர்ந்துள்ளது.
விலைப் பொருள் அல்ல:
நம் நாட்டிலும் தேர்தல் போல வெளிநாடுகளிலும் தேர்தல் நடக்க இருக்கிறது. விலை ஏற்றத்திற்கு இதுவும் ஒரு காரணம் என்று சொல்லலாம். ஆனால், தங்கம் என்பது விலை பொருள் அல்ல அது மண்ணிலும், மலைகளிலும், பாறைகளிலும் இருந்து தோண்டி,கண்டெடுக்கக் கூடிய ஒரு பொருளாக உள்ளது. நம் நாட்டிலும் கர்நாடகாவில் போலார் தங்க வயல் கூட இருந்தது.தங்கம் இல்லாததால் எப்போதே மூடப்பட்டது.
தற்போது ஆப்பிரிக்கா, லண்டன் உள்ளிட்ட வெளிநாடுகளில் தான் கொஞ்சம் கொஞ்சமாக் கிடைக்கிறது. அதுவும் அவ்வப்போது குறைந்தும் வருகிறது. வரும் ஆண்டுகளில் முற்றிலும் குறையும் தறுவாயும் ஏற்படலாம். எனவே இதனால் தங்கத்தின் விலையில் சரிவு இருப்பது என்பது முக்கியமான ஒன்று.
தங்கத்தின் விலையானது தற்போது இருக்கும் விலையை விட அதிக அளவில் குறைய வாய்ப்பு இருந்தாலும், ஆனால் மீண்டும் இப்போது இருக்கும் விலை மற்றும் இதற்கு அதிகமான விலையில் விற்பனை ஆகும்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…