கடந்த சில நாட்களாக உலக சந்தையில் தங்கத்தின் விலையானது ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகின்றது.
அந்தவகையில், முன்னைய தினங்களுடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(15) தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளது.
இன்றைய நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 710,638 ரூபாயாக காணப்படுகின்றது.
24 கரட் தங்க கிராம் 25,070 ரூபாயாக பதிவாகியுள்ளது. அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 200,550 ரூபாயாக பதிவாகியுள்ளது.
அதேபோல 22 கரட் தங்க கிராம் 22,990 ரூபாயாக பதிவாகியுள்ளது.
22 கரட் தங்கப் பவுண் 183,850 ரூபாயாக பதிவாகியுள்ளது.
21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 21,940 ரூபாயாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் இன்றையதினம் 175,500 ரூபாயாக பதிவாகியுள்ளது.
எனினும் தங்க ஆபரணங்களின் விலை மாற்றமடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
|
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02
|

