தீபாவளி பண்டிகை வரும் 31ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பண்டிகைக்கான நாட்கள் நெருங்கி வரும் நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் வெடி விற்பனை களைகட்டி வருகிறது. குறிப்பாக திருநெல்வேலி மாவட்டத்திற்கு சிவகாசியிலிருந்து புது வகையான கம்பி மத்தாப்பு, புஷ்வானம் உள்படப் பலவகை பட்டாசுகள் வந்துள்ளது.
இது குறித்து பட்டாசுக் கடை உரிமையாளர் ரமேஷ் கூறுகையில், “பட்டாசுகளை ஆஃபரில் கொடுப்பதால் சென்ற வருடம் வெடி அதிகமாக விற்பனையானது. எனவே இந்த வருடமும் ஆஃபரில் கொடுக்க ஆரம்பித்தோம். நல்ல வரவேற்பு உள்ளது.
கடை தொடங்கி ஐந்து நாட்கள் ஆகிவிட்டது. தற்போது வரை கூட்டம் வந்து கொண்டே உள்ளது. சிவகாசியில் கம்பெனி வைத்துள்ளோம். எனவே குறைந்த விலையில் மக்களுக்குப் பட்டாசுகளை எங்களால் கொடுக்க முடிகிறது. 30 சாட் 350 ரூபாய், 60 சாட் 700 ரூபாய், 120 சாட் 1400 ரூபாய், 240 சாட் 2800 ரூபாய்க்கு கொடுக்கப்படுகிறது.
இதையும் படிங்க:TNSTC Recruitment: அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் 2,877 காலிப்பணியிடங்கள்… பணியிடம் குறித்த முழு விபரம்…
கிப்ட் பாக்ஸ்களும் நம்மளுடைய கம்பெனியில் தயார் செய்வதால் மற்ற இடங்களை விட குறைவான விலையில் கொடுக்கப்படுகிறது. பழைய வெடிகளான லட்சுமி வெடி பிஜிலி வெடி அணு குண்டு போன்ற பழைய வெடிகளும் உள்ளன.
அதுமட்டுமில்லாமல் புதிய வரவாகக் கம்பி மத்தாப்பு மற்றும் புஷ்வானம் வந்துள்ளது அதாவது ஈமு எக்கு என்ற வெடி வந்துள்ளது. இந்த வெடியானது பற்ற வைத்த உடன் புஷ்வானம் போன்று தீப்பொறிகள் வெளியே வரும். பின்னர் முட்டை போன்று பலூன் தானாகவே பெரியதாகும்.
இந்த வெடியானது குழந்தைகள் அதிகம் விரும்புவதால் பொதுமக்கள் அதிகளவில் வாங்கி செல்கின்றனர். இந்த வருடம் இந்த வெடி திருநெல்வேலியில் அதிகமாக விற்பனையாகிறது. ட்ரெயின் புஷ்வானம் உள்ளது. இது மூன்று எண்ணிக்கையில் இருக்கும். ஒரே கலரில் தீப்பொறி வெளிவரும். பஸ் புஸ்வானம் ஆனது வெவ்வேறு கலரில் தீப்பொறிகள் வெளியே வரும்.
இதையும் படிங்க: ஜோதிடத்தில் 50 ஆண்டு கழித்து மாற்றம்… அற்புத பலன் பெறும் ராசிகள்…
இதில் மூன்று எண்ணிக்கையில் புஸ்பானம் இருக்கும். இதற்கு ஒரே திரி மட்டுமே. இன்னொரு புதுவரவாக ரொட்டேடிங் கம்பி மத்தாப்பு வந்துள்ளது. அதாவது மத்தாப்பைப் பற்ற வைத்தவுடன் தானாகவே ரொட்டேட் ஆகும்” எனத் தெரிவித்தார்.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)