• Login
Friday, March 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

ட்ரம்ப் வெற்றிக்கு உதவிய துளசி கப்பார்ட் | team that helped Donald Trump return to White House

GenevaTimes by GenevaTimes
November 7, 2024
in உலகம்
Reading Time: 5 mins read
0
ட்ரம்ப் வெற்றிக்கு உதவிய துளசி கப்பார்ட் | team that helped Donald Trump return to White House
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் வெற்றி பெற்ற முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீண்டும் அதிபர் ஆகவுள்ளார். இவர் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற உதவிய குழுவில் அரசியல் பிரபலம் துளசி கப்பார்ட், தொழிலதிபர்கள் விவேக் ராமசாமி,எலான் மஸ்க், ராபர்ட் எப். கென்னடி ஜூனியர், ஜே.டி.வான்ஸ் எனபலர் இடம் பிடித்தனர். அவர்களில் முக்கியமானவர் துளசி கப்பார்ட்.

அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தில் இருந்து ஜனநாயக கட்சி சார்பில் 4 முறை எம்.பி.யாகதேர்வு செய்யப்பட்டவர் துளசி கப்பார்ட். அமெரிக்காவின் முதல்இந்து எம்.பி. ஆனால், இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் அல்ல. இவர் கடந்த 1981-ம் ஆண்டுஅமெரிக்காவில் பிறந்தார். இவரின் தாய் கரோல் கப்பார்ட் இந்துவாக மதம் மாறினார். அதனால் அவர் தனது ஐந்து குழந்தைகளுக்கும் இந்து பெயர்களை வைத்தார். நான்காவதாக பிறந்த மகளுக்கு துளசி என்ற சம்ஸ்கிருத பெயரை வைத்தார்.

இவர் கடந்த 2002-ம் ஆண்டில் தனது 21-ம் வயதிலேயே அமெரிக்காவின் ஹவாய் மாகாண தேர்தலில்ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு பிரதிநிதியாக தேர்வு செய்யப்பட்டார். இவர் 2003-ம் ஆண்டு அமெரிக்க ராணுவத்தில் சேர்ந் தார். கடந்த 2004-ம் ஆண்டு இராக் அனுப்பப்பட்டார். அங்கு ஒராண்டு ராணுவப் பணியை முடித்துவிட்டு திரும்பினார். அதன்பின்பு ராணுவ அதிகாரியாக லெப்டினன்ட் கர்னல் அந்தஸ்து வரை உயர்ந்தார். இவர் கடந்த 2012-ம் ஆண்டில் ஜனநாயக கட்சி சார்பில் ஹவாய்மாகாணத்தில் போட்டியிட்டு எம்.பி.ஆனார். இவர் ஹவாய் மாகாணத்தில் இருந்து 4 முறை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார்.

இவர் கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக போட்டியிட்டார். பின்னர் அதிபர் வேட்பாளர் போட்டியில்இருந்து விலகி, ஜோ பைடனுக்கு ஆதரவு தெரிவித்தார். இவர் கடந்த2022-ம் ஆண்டு ஜனநாயக கட்சியில் இருந்து விலகினார். இந்தாண்டு தொடக்கத்தில் இவர் குடியரசு கட்சியில் சேர்ந்தார். மிச்சிகன் நகரில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த அமெரிக்க நேசனல் கார்ட் கருத்தரங்கில், அதிபர் தேர்தலில், குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் போட்டியிடுவதை ஆதரித்து பேசினார். இது ட்ரம்பை மிகவும் கவர்ந்தது. ஜனநாயக கட்சியில் இருந்தபோது துளசி கப்பார்டின் கொள்கைகள் மற்றும் பேச்சுக்கள் ட்ரம்பை கவர்ந்தன.

அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸுக்கு எதிராக பேச துளசி கப்பார்ட்டின் பங்களிப்பை ட்ரம்ப் நன்கு பயன்படுத்தினார். பொதுக் கூட்டங்கள் மற்றும் விவாதங்களில் ஜனநாயக கட்சியின் கொள்கைகளை கடுமையாக விமர்சித்தார். ட்ரம்பின் கொள்கைகளை வாக்காளரிடம் கொண்டுசேர்த்தார்.

இதன் மூலம் ட்ரம்பின் தேர்தல் வெற்றிக்கு துளசி கப்பார்ட்உதவியுள்ளார். ட்ரம்ப் நிர்வாகத்தில் துளசிக்கு முக்கிய பதவி அளிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

ஜே.டி.வான்ஸ்: அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் இருந்து குடியரசு கட்சி சார்பில் செனட் உறுப்பினராக தேர்வுசெய்யப்பட்டவர் ஜே.டி.வான்ஸ். ஒரு காலத்தில் அதிபர் ட்ரம்ப்பை விமர்சித்தவர் பின்னர் குடியரசு கட்சியில் இணைந்து செனட் உறுப்பினர் ஆனார். சிறந்த அறிவாளியாக திகழும் ஜே.டி.வான்ஸை துணை அதிபர் பதவிக்கு ட்ரம்ப் தேர்வு செய்துள்ளார். ஜே.டி.வான்ஸுக்கு தொழிலாளர் வர்க்கத்தினரின் ஆதரவு அதிகம் உள்ளது. அவர்களின் ஓட்டும் ட்ரம்ப் வெற்றிக்கு உதவியுள்ளது.

விவேக் ராமசாமி: முதலாம் தலைமுறையைச் சேர்ந்த இந்திய அமெரிக்கர் விவேக் ராமசாமி, அனைவரையும் கவர்ந்திழுக்கும் தொழிலதிபராக திகழ்கிறார். குடியரசு கட்சியை சேர்ந்த இவர், அதிபர் தேர்தல் வேட்பாளராக கடந்தாண்டு அறிவித்தார். ஆனால், தனக்கு போதிய ஆதரவு இல்லாததால், தனது பிரச்சாரத்தை கடந்த ஜனவரி மாதம் நிறுத்திக் கொண்டார். இவர் ட்ரம்ப் பிரச்சார குழுவில் இடம் பிடித்தது, இளைஞர்கள் மற்றும் வெளிநாடு களில் இருந்து அமெரிக்காவில் குடி

யேறிவர்களை அதிகம் ஈர்க்க உதவியது.

ராபர்ட் எப் கென்னடி ஜூனியர்: அமெரிக்க முன்னாள் அதிபர் ஜான் எப்.கென்னடி குடும்பத்தை சேர்ந்த சுயேட்சை அரசியல்வாதி ராபர்ட் எப்.கென்னடி ஜூனியர். சுற்றுச்சூழல், சுகாதாரம் போன்றவற்றில் மிகவும் அக்கறையுள்ளவர். பைடன் நிர்வாகத்தின் சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் கொள்கைகளை இவர் விமர்சித்தார். இது இவரை ட்ரம்ப் ஆதரவாளர் ஆக்கியது. இதனால் ராபர்ட் எப் கென்னடி ஜூனியர் ஆதரவாளர்கள் குடியரசு கட்சிக்கு வாக்களிக்க வழிவகுத்தது.

எலான் மஸ்க்: அமெரிக்காவின் பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க். ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ. ட்ரம்பை பேட்டி யெடுத்து தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டார். ட்ரம்ப்புக்கு எலான் மஸ்க்கின் ஆதரவு இளம் வாக்காளர்களை ஈர்த்தது.



Read More

Previous Post

FD-யில் இந்த லிமிட்டுக்கு மேல் பணத்தை போடாதீங்க..? ரிசர்வ் வங்கி சொல்வது என்ன?

Next Post

சட்டவிரோதமாக கடன் வழங்கி வந்த 6 வங்காளதேச ஆடவர்கள் கைது | Makkal Osai

Next Post
சட்டவிரோதமாக கடன் வழங்கி வந்த 6 வங்காளதேச ஆடவர்கள் கைது | Makkal Osai

சட்டவிரோதமாக கடன் வழங்கி வந்த 6 வங்காளதேச ஆடவர்கள் கைது | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin