அமெரிக்காவில் குடியரசுக்கட்சி வேட்பளார் ட்ரம்ப் மீது பரப்புரையின் போது துப்பாக்கிச்சூடு நடத்திய இளைஞர் குறித்த பல்வேறு திடுக்கிடும் தகவல்களை அமெரிக்க புலனாய்வுத்துறையான எப்பிஐ வெளியிட்டுள்ளது.
கடந்த 14-ம் தேதி அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணம், பட்லர் நகரில் நடைபெற்ற பிரச்சாரகூட்டத்தில் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் பங்கேற்றார். அவர் பேசத் தொடங்கிய சில நிமிடங்களில் மர்மநபர் ஒருவர் ட்ரம்பை குறிவைத்து துப்பாக்கியால் சுட்டார்.
மொத்தம் 8 குண்டுகள் சீறிப் பாய்ந்த நிலையில், ஒரு குண்டு ட்ரம்பின் வலது காதை துளைத்துச் சென்றது. நூலிலையில் அவர் உயிர் தப்பினார், சுதாரித்துக் கொண்ட பாதுகாப்புப் படை வீரர்கள், மர்மநபரை சுட்டுக் கொன்றனர்.
அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில், அமெரிக்க புலனாய்வு துறையான எப்பிஐ விசாரணையைத் தொடங்கியது. துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் செல்போன், லேப்டாப் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுது.
இதில் துப்பாக்கிச் சூடு நடத்திய இளைஞரின் பெயர் தாமஸ் மேத்யூ க்ருக்ஸ் எனத் தெரியவந்துள்ளது. அந்த இளைஞர், பென்சில்வேனியாவில் உள்ள பேத்தல்பார்க் என்ற பகுதியை சேர்ந்தவர். அந்த ஊரில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் 2022 ஆம் ஆண்டு பள்ளிப் படிப்பை முடித்த அவர், கணக்கு மற்றும் அறிவியல் பாடங்களில் சிறந்து விளங்கியுள்ளார்.
பள்ளியில் படித்தபோது அவர் மிகவும் அமைதியானவராக இருந்துள்ளார். பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, வீட்டின் அருகே, ஒரு நர்ஸிங் ஹோமில் உள்ள சமையல் கூடத்தில் பணியாற்றி வந்துள்ளார். 2021ஆம் ஆண்டில் CLAIRTON ஸ்போர்ட்ஸ்மேன்ஸ் க்ளப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்றுள்ளார். 171 மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை எளிதில் சுடும் திறன் படைத்தவராக இருந்துள்ளார்.
இதையும் படிங்க : சகோதரனை காதலித்த இளம்பெண் – மருத்துவர் செய்த குழப்பம்! – என்ன நடந்தது தெரியுமா?
துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு ஒருநாள் முன்னதாக தாமஸ் மேத்யூ, பெத்தேல் பார்க் பகுதியில் உள்ள மைதானத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டு உள்ளார். துப்பாக்கிகளை விற்பனை செய்யும் கடையில் 50 குண்டுகள் மற்றும் உயரமான ஏணி ஒன்றையும் வாங்கியுள்ளார்.
ட்ரம்ப்பின் பரப்புரை நடந்த பட்லர் டவுனுக்கு, பேத்தல் பார்க்கிலிருந்து 70 கிலோ மீட்டர் பயணித்து வந்துள்ளார். ட்ரம்ப் பேசிய மேடையில் இருந்து சுமார் 400 அடி தொலைவில் உள்ள கட்டிடத்தின் மீது ஏணியின் உதவியுடன் ஏறிய தாமஸ் மேத்யூ, ஏ.ஆர்.15 ரக துப்பாக்கியால் ட்ரம்பை குறிவைத்து 8 முறை சுட்டுள்ளார்.
இதில் ட்ரம்ப் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினாலும், அவரது ஆதரவாளர் ஒருவர் உயிரிழந்தார். 2 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தாமஸ் மேத்யூ குடியரசு கட்சியின் உறுப்பினராக இருந்துள்ளார். அவருக்கு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இல்லை. அவர் மீது எந்தவொரு வழக்கும் நிலுவையில் இல்லை என்பது தெரியவந்துள்ளது. .
எதற்காக அவர் ட்ரம்பை கொலை செய்ய முயன்றார் என்பது இன்னமும் மர்மமாகவே உள்ளது. இவரது குடும்பத்தினர், வகுப்புத்தோழர்கள், ஆசிரியர்கள், சக ஊழியர்கள் என யாருமே மேத்யூவின் மனநிலையை அறிந்திருக்கவில்லை. ட்ரம்ப் மீது துப்பாக்கியால் சுட வேண்டுமென திட்டம் தீட்டியதற்கு இதுவரை எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.
தாமஸ் மேத்யூ துப்பாக்கியுடன் பிரச்சார கூட்டத்தில் நுழைந்தது எப்படி என பல்வேறு தரப்பிலும் கேள்விகள் எழுப்பப்பட்டன. அவர் பிரச்சார கூட்டம் நடைபெற்ற மைதானத்துக்குள் வரவில்லை. மைதானத்துக்கு வெளியே உள்ளகட்டிடத்தில் ஏறி, அங்கிருந்து தாக்குதல் நடத்தி உள்ளார். அதனால் பாதுகாப்புப் படையினரின் சோதனையில் சிக்கவில்லை.
அமைதியாக காணப்படும் அவர், மிகப்பெரிய தாக்குதலை நடத்தியிருப்பது மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக பெத்தெல் பார்க் பகுதிமக்கள் தெரிவிக்கின்றனர். இதனிடையே `ட்ரம்ப்பின் உயிருக்கு இரான் நாட்டால் அச்சுறுத்தல் இருப்பது குறித்து அமெரிக்க ரகசிய உளவு அமைப்பு தெரிவித்துள்ளது.
2020-ம் ஆண்டு இராக்கில், இரான் குட்ஸ் படையின் தளபதி காசிம் சுலைமானி மீது ட்ரோன் மூலம் அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தியது. அந்த சம்பவத்திற்குப் பின் ட்ரம்ப் மற்றும் அவரது முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ உள்ளிட்டோருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அமெரிக்க உளவு அமைப்பு தெரிவித்து வந்தது
இதையும் படிங்க:
மனைவி உட்பட 42 பெண்கள் கொடூர கொலை… குப்பை கிடங்கை சவக்குழியாக மாற்றிய சைக்கோ கில்லர்… அதிர்ச்சி சம்பவம்!
ஆனால், ஐ.நா சபையின் இரானிய தூதுக்குழு, தங்கள் மீது அமெரிக்கா ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி வருவதாக தெரிவித்திருந்தது. ட்ரம்ப் மீதான தாக்குதலுக்கு இரான் பின்னணி காரணமாக இருக்குமா? என்ற கோணத்திலும் எப்பிஐ விசாரித்து வருகிறது.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)