• Login
Thursday, July 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் இந்திய சார்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்பு | External Affairs Minister Jaishankar to represent India at Trump Oath taking ceremony

GenevaTimes by GenevaTimes
January 12, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் இந்திய சார்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்பு | External Affairs Minister Jaishankar to represent India at Trump Oath taking ceremony
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்டு டிரம்ப் பதவியேற்பு நிகழ்ச்சியில் இந்தியா சார்பில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பங்கேற்பார் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. டிரம்ப்-வான்ஸ் தொடக்க விழா குழுவின் அழைப்பை ஏற்று இந்த விஜயம் மேற்கொள்ளப்பட உள்ளது.

இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்கம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “ டிரம்ப் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் புதிதாக பொறுப்பேற்கும் நிர்வாகத்தின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுவார். மேலும், இந்த விழாவுக்கு வருகை தரும் இதர வெளிநாட்டு பிரதிநிதிகளுடன் ஜெய்சங்கர் உரையாடுவார்” என்று தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வாகியுள்ள டொனால்டு டிரம்ப் ஜனவரி 20-ம் தேதி பதவியேற்க உள்ளார். அமெரிக்க அதிபரின் பதவியேற்பு நிகழ்வில் வெளிநாட்டு தலைவர்கள் கலந்து கொள்வது அந்நாட்டு வரலாற்றில் இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.

சீன அதிபர் ஜி ஜின்பிங், இத்தாலி பிரதமர் ஜியார்ஜியோ மெலோனி, அர்ஜெண்டினா அதிபர் ஜேவியர் மிலி, எல் சால்வடார் அதிபர் நயீப் புகேலே உள்ளிட்ட தலைவர்களும் அமெரிக்க அதிபரின் பதவியேற்பு விழாவுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக வாஷிங்டன் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சீன அதிபர் ஜி ஜின்பிங் தனக்கு பதிலாக உயர்மட்ட தூதர் ஒருவரை அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழாவுக்கு அனுப்பி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரேசிலின் முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ போன்ற டிரம்ப் சித்தாந்தத்துடன் ஒத்துபோகக்கூடிய வேறு சில தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

டொனால்டு டிரம்ப்பின் பதவியேற்பு விழாவுக்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்படுமா என்று சமூக ஊடகங்களில் பல ஊக செய்திகள் பரவி வந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இருப்பினும், டிரம்ப் பதவியேற்பு விழாவுக்கு பிரதமர் மோடிக்கு நேரடியாக அழைப்பு விடுக்கப்பட்டதா என்பது குறித்தும் அவருக்கு பதிலாகத்தான் ஜெய்சங்கர் கலந்து கொள்கிறாரா என்பது குறித்தும் மத்திய அரசு வட்டாரங்கள் கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.



Read More

Previous Post

ரோகித் சர்மாவின் அதிரடி முடிவு: பயிற்சியாளருக்கு ஏற்பட்ட ஏமாற்றம்

Next Post

சத்தீ்ஸ்கரில் ரூ.75,000 கோடி முதலீடு: அதானி குழுமம் திட்டம் | Gautam Adani announces mega investment in Chhattisgarh

Next Post
சத்தீ்ஸ்கரில் ரூ.75,000 கோடி முதலீடு: அதானி குழுமம் திட்டம் | Gautam Adani announces mega investment in Chhattisgarh

சத்தீ்ஸ்கரில் ரூ.75,000 கோடி முதலீடு: அதானி குழுமம் திட்டம் | Gautam Adani announces mega investment in Chhattisgarh

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin