• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

ட்ரம்ப், நெதன்யாகுவிடம் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி: காசா அமைதி ஒப்பந்தத்துக்கு வாழ்த்து! | PM speaks to Trump, Netanyahu

GenevaTimes by GenevaTimes
October 26, 2025
in உலகம்
Reading Time: 6 mins read
0
ட்ரம்ப், நெதன்யாகுவிடம் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி: காசா அமைதி ஒப்பந்தத்துக்கு வாழ்த்து! | PM speaks to Trump, Netanyahu
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் முன்மொழிந்த அமைதி ஒப்பந்தத்துக்கு இஸ்ரேலும், ஹமாஸும் ஒப்புக் கொண்டுள்ள நிலையில், காசாவில் முதற்கட்ட தற்காலிக போர்நிறுத்தம் அமலாகவிருக்கிறது.

இதுதொடர்பாக ட்ரம்ப்பை பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “எனது நண்பர் அதிபர் ட்ரம்ப்பிடம் பேசி, வரலாற்று சிறப்புமிக்க காசா அமைதி ஒப்பந்தத்தின் வெற்றிக்காக அவரை வாழ்த்தினேன். வர்த்தக பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட நல்ல முன்னேற்றத்தையும் மதிப்பாய்வு செய்தேன். வரும் வாரங்களில் நெருங்கிய தொடர்பில் இருக்க ஒப்புக்கொண்டேன்” என்று பதிவிட்டுள்ளார்.

அதே போல தனது மற்றொரு பதிவில், “எனது நண்பர் பிரதமர் நெதன்யாகுவை தொலைபேசியில் அழைத்து, அதிபர் ட்ரம்ப்பின் காசா அமைதி ஒப்பந்தத்தின் கீழ் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்திற்கு வாழ்த்து தெரிவித்தேன். பணயக்கைதிகள் விடுதலை மற்றும் காசா மக்களுக்கு மனிதாபிமான உதவி தொடர்பான ஒப்பந்தத்தை நாங்கள் வரவேற்கிறோம். உலகில் எந்த வடிவத்திலும் அல்லது வெளிப்பாட்டிலும் பயங்கரவாதம் ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதை மீண்டும் உறுதிப்படுத்தினோம்” என்று தெரிவித்துள்ளார்.

இஸ்​ரேல் ராணுவம் மற்​றும் காசா​வின் ஹமாஸ் குழு​வினர் இடையே கடந்த 2 ஆண்​டு​களாக போர் நீடித்து வரு​கிறது. இந்த போருக்கு முற்​றுப்​புள்ளி வைக்க அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் 20 அம்ச திட்​டத்தை முன்​மொழிந்​துள்​ளார். போரி​னால் பாதிக்​கப்​பட்​டுள்ளகாசா மீண்​டும் கட்டி எழுப்​பப்​படும். அந்த பகு​தி​யில் இருந்து தீவிர​வாதம் அகற்​றப்​படும். ஹமாஸ் குழு​வின் பிடி​யில் உள்ள இஸ்​ரேல் பிணைக் கைதி​கள் உடனடி​யாக விடு​தலை செய்​யப்பட வேண்​டும். உயி​ரிழந்​தவர்​களின் உடல்​களை ஒப்​படைக்க வேண்​டும். போர் நிறுத்​தம் அமல் செய்​யப்​பட்ட பிறகு காசா​வில் இருந்து இஸ்​ரேல் ராணுவம் படிப்​படி​யாக வெளி​யேறும்.

ஹமாஸ் குழு​வினர் ஆயுதங்​களை கைவிட வேண்​டும். அவர்​களுக்கு பொது மன்​னிப்பு வழங்​கப்​படும். காசா​வில் இருந்து அவர்​கள் பாது​காப்​பாக வெளி​நாடு​களில் குடியேறலாம். காசாவை நிர்​வகிக்க உள்​ளூர் தலை​வர்​கள் அடங்​கிய புதிய குழு அமைக்​கப்​படும். இந்த குழு​வில் ஹமாஸ் தலை​வர்​களுக்கு இடம் கிடை​யாது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பிரிட்​டிஷ் முன்​னாள் பிரதமர் டோனி பிளேர் உள்​ளிட்​டோர் அடங்​கிய சர்​வ​தேச குழு​வின் வழி​காட்​டு​தலின்​படி புதிய குழு காசாவை நிர்​வகிக்​கும். காசா​வில் சிறப்பு பொருளா​தார மண்​டலம் உரு​வாக்​கப்​படும்.சர்​வ​தேச முதலீடு அதி​கரிக்​கப்​படும். வேலை​வாய்ப்​பு​கள் பெருக்​கப்​படும். ஐஎஸ்​எப் என்ற சர்​வ​தேச படை காசா​வில் பாது​காப்பு பணியை மேற்​கொள்​ளும் என்பன உள்​ளிட்ட திட்​டத்தை அதிபர் ட்ரம்ப் அறி​வித்​திருக்​கிறார். இந்த அமைதி ஒப்பந்தத்துக்கு இஸ்ரேலும், ஹமாஸும் ஒப்புக் கொண்டுள்ளன.



Read More

Previous Post

Gold Price Drop | அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் குஷி.. இன்றைய நிலவரம் இதோ! | வணிகம்

Next Post

கோத்தா திங்கி விபத்து: 2 பேர் மரணம் மற்றும் 5 பேர் காயம்

Next Post
கோத்தா திங்கி விபத்து: 2 பேர் மரணம் மற்றும் 5 பேர் காயம்

கோத்தா திங்கி விபத்து: 2 பேர் மரணம் மற்றும் 5 பேர் காயம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin