அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆரம்பித்த ஈரான் மீதான இராணுவ நடவடிக்கை (military operation) ஒரு மாதத்தை நெருங்கும் நிலையில், அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களிடையே அதிருப்தி அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் விளக்கியுள்ளன.
பெப்ரவரி இறுதியில் அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதலைத் தொடங்கியதில் இருந்து சுமார் ஒரு மாதம் ஆகியுள்ளது.
ட்ரம்ப் இதை “போர்” என்று அழைக்க மறுத்து, “இராணுவ நடவடிக்கை” அல்லது “மிலிட்டரி டிசிமேஷன்” (military decimation) என்றே குறிப்பிடுகிறார்.
போர் என்ற வார்த்தை
“போர்” என்ற வார்த்தையைப் பயன்படுத்தினால் காங்கிரஸின் ஒப்புதல் தேவைப்படும் என்பதால் இந்த அணுகுமுறையை அவர் கையாள்வதாகக் கூறப்படுகிறது.

மேலும், அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் (US House of Representatives) மிக முக்கியமான நிரந்தரக் குழுக்களில் ஒன்றான பாதுகாப்பு மற்றும் இராணுவ விவகாரங்களை கவனிக்கும் முக்கிய குழு கூட்டத்தில் சில தரப்பினர் பென்டகன் கொடுத்த இரகசிய விளக்கத்தில் தெளிவு இல்லாததால், ரிபப்ளிகன் உறுப்பினர்கள் (குறிப்பாக Nancy Mace) கோபமடைந்து கூட்டத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.
போர் எவ்வளவு காலம் நீடிக்கும், தரைப்படை அனுப்பப்படுமா, செலவு என்ன என்பது பற்றிய தெளிவான பதில் இல்லை என்று அவர் விமர்சித்துள்ளனர்.
பல ரிபப்ளிகன் உறுப்பினர்கள் தெளிவற்ற இலக்குகள், அதிக செலவு, தரைப்படை அபாயம் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி, மேலும் பில்லியன் டொலர் நிதி ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அத்தோடு ட்ரம்ப் நிர்வாகம் இதுவரை போரின் தெளிவான திட்டம், இறுதி இலக்கு, கால அட்டவணை அல்லது மொத்த செலவு பற்றிய முழுமையான விவரங்களை காங்கிரஸுக்கு வழங்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அவசர நிதி கோரிக்கை
சுமார் 200 பில்லியன் டொலர் அளவிலான அவசர நிதி கோரிக்கை வரவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக ட்ரம்ப் தரப்பு நிலைப்பாடுடிரம்ப் தரப்பில், நடவடிக்கை வாரங்களில், மாதங்களில் அல்ல முடிவடையும் என்றும், தரைப்படை தேவையில்லை என்றும் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ உள்ளிட்டோர் கூறியுள்ளனர்.
ஹார்முஸ் நீரிணையை திறக்க ஈரானுக்கு கெடு விதிக்கப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தை நடப்பதாக ட்ரம்ப் கூறினாலும், ஈரான் தரப்பு அதை மறுத்துள்ளது.
இந்த நிலையில், அமெரிக்க உள்நாட்டு அரசியலில் பெரும் பிளவு ஏற்பட்டுள்ளது. இது எரிபொருள் விலை உயர்வு, பொருளாதார பாதிப்பு ஆகியவையும் கவலையை அதிகரித்துள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

