உதாரணத்திற்கு இலங்கையிடம் இருந்து அமெரிக்கா ஆடைகளை வாங்குகிறது. இலங்கை அமெரிக்காவிடம் இருந்து மருந்துகள், எரிவாயு போன்றவற்றை வாங்குகிறது. அதனால், அவற்றின் மூலப்பொருள், நன்மைகள், வளர்ச்சிகள் பொறுத்தே வரி அமைய வேண்டும்.
ட்ரம்ப்பின் வரி சரி என எடுத்துக்கொண்டாலும், பிற நாடுகள் நம் மீது அதிக வரி விதிக்கக்கூடும். பிற நாடுகளின் அமெரிக்காவின் பொருள்களின் விலையை அதிகப்படுத்தும். அதனால், அமெரிக்காவின் ஏற்றுமதி பாதிக்கப்படும்.
ஆக மொத்தம், ட்ரம்ப்பின் இந்தக் கொள்கை கைவிடப்பட வேண்டும். மேலும், இந்த வரியை நான்கால் வகுத்து விதிக்க வேண்டும்” என்று எழுதியுள்ளார்.

ட்ரம்ப்பின் இந்த அதிரடி வரி விதிப்பு பெரியளவில் பாதிப்புகளை சந்தித்து உள்ளதால் தான் தற்போது ட்ரம்ப் வரி விதிப்பை ஒத்தி வைத்துள்ளார் மற்றும் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று பிரகடனப்படுத்தி உள்ளார்.
நேற்று வெள்ளை மாளிகை, “அமெரிக்காவின் வரி விதிப்பிற்கு எதிராக எதாவது ஒரு நடவடிக்கையை எடுத்தால், அதற்கான பலனை சந்திப்பீர்கள்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த 90 நாள்கள் இடைவெளியில் பிற நாடுகள் அமெரிக்கா உடன் பேச்சுவார்த்தை நடத்திகொண்டு, ஒரு நல்ல முடிவை எடுப்பது அனைத்தும் நாடுகளுக்கும், உலக பொருளாதாரத்திற்கும் நன்மை பயக்கும்.
இந்த பரஸ்பர வரியினால் அமேசான் நிறுவனம் சீனாவில் இருந்து பொருள்களை கொள்முதல் செய்வதை நிறுத்தியுள்ளது. இதனால் சீனாவில் குறைந்த விலைக்கு கிடைக்கும் பொருள்களை பிற நாடுகளில் இருந்து வாங்க வேண்டியதாக இருக்கும். இதனால், பொருள்களின் விலைகள் கூடும். நுகர்வோர்கள் பாதிக்கப்படுவார்கள். நுகர்வு பாதித்தால் பொருளாதாரம் பாதிப்படையும்.
இது சீனாவிற்கு மட்டுமே நடக்கிறது என்றாலும், பரஸ்பர வரி அனைத்து நாடுகளுக்கு அமலுக்கு வரும்போது உலக பொருளாதாரம் பெரும் பாதிப்படையும்.
அந்த ஒட்டுமொத்த பாதிப்பிற்கான இப்போதைய சின்ன உதாரணம் சீனா தான்.

