அமெரிக்காவில் வரும் நவம்பர் 5ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். துணை அதிபராக ஜே.டி.வான்ஸ் போட்டியிடுகிறார். ஒஹியோ மாகாணத்தில் செனட்டரான ஜே.டி.வான்ஸ் துணை அதிபர் வேட்பாளர் என்று மில்வாகியில் நடைபெற்ற குடியரசு கட்சி தேசிய ஆலோசனைக் கூட்டத்தில் ட்ரம்ப் அறிவித்தார்.
தற்போது 39 வயதாகும் ஜே.டி.வான்ஸ் கடந்த 2022ஆம் ஆண்டு செனட்டிற்கு தேர்வு செய்யப்பட்டார். இவர் ட்ரம்பின் ”Make America Great Again” என்ற பிரச்சாரம் மற்றும் வர்த்தகம், வெளியுறவுத்துறை கொள்கை, புலம்பெயர்ந்தோர் சட்டங்கள் ஆகியவற்றை கடுமையாக எதிர்த்து வந்தவர். ஒரு கட்டத்தில் ட்ரம்பின் ஆதரவாளராக மாறி ஆச்சரியம் தந்த இவர், தற்போது துணை அதிபர் வேட்பாளராக களம் கண்டுள்ளார்.
ஓஹியோ மாகாணத்தின் மிட்டில்டவுனை சேர்ந்த இவர், கடல்சார், சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை என பல்வேறு வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். இவரது மனைவி உஷா சிலிகுரி. இவர் ஓர் இந்திய வம்சாவளி பெண். இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் புலம்பெயர்ந்த தம்பதிக்கு பிறந்தவர் உஷா சிலிகுரி. இவரது பெற்றோர்களின் சொந்த மாநிலம் ஆந்திரப் பிரதேசம்.
உஷா சிலிகுரி கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தத்துவவியல் முதுகலைப் பட்டம் பெற்றார். அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதிகளான பிரெட் கவனாஹ், ஜான் ராபர்ட்ஸ் ஆகியோரிடம் பணியாற்றிய இவர், லாஸ் ஏஞ்சலீஸ், சான் பிரான்சிஸ்கோ, வாஷிங்டன் டி.சி. ஆகிய நகரங்களில் உள்ள பிரபல நிறுவனங்களில் சட்ட வல்லுநராக பணியாற்றியவர். பல முக்கிய வழக்குகளை கையாண்டு வந்த இவர், அண்மையில்தான் தனது பணிகளை துறந்தார்.
இதையும் படிங்க:
ஒரே நபரை 7 முறை கடித்த பாம்பு – பாம்புகள் பழிவாங்குமா? அதன் நினைவாற்றல் எப்படி?
முதன்முதலில் யேல் சட்டப்பல்கலைக்கழகத்தில் ஜே.டி.வான்சும், உஷாவும் சந்தித்துக் கொண்ட நிலையில், கடந்த 2014ஆம் ஆண்டு கென்டக்கில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தற்போது 3 குழந்தைகள் உள்ளனர்.
.
&w=750&resize=750,375&ssl=1)
