மேற்கு ஆசியா நிலவரம் குறித்தும் (அமெரிக்கா- ஈரான் போர்) ஹார்முஸ் ஜலசந்தியில் பாதுகாப்பான, தடையற்ற கப்பல் போக்குவரத்தை உறுதி செய்வது குறித்தும் ஆலோசனை நடத்தினோம்” என்று பதிவிட்டிருக்கிறார்.
மேலும் இதுதொடர்பாக பேசிய இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர், “அமெரிக்கா, ஈரான் இடையிலான மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வருகின்றன.

அந்த நாடுகளின் சமரச முயற்சியை அமெரிக்கா வரவேற்கிறது. இதேபோல இந்தியாவின் சமரச முயற்சியையும் நாங்கள் முழு மனதுடன் வரவேற்கிறோம்.
அதிபர் ட்ரம்பும் பிரதமர் மோடியும் செவ்வாய்க்கிழமை 40 நிமிடங்கள் பேச்சுசுவார்த்தை நடத்தினர். அப்போது ஈரான் போர் மற்றும் இந்தியா-அமெரிக்கா இடையிலான வர்த்தகம் குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது’’ என்று கூறியிருக்கிறார்.
