Last Updated:
சீனாவுக்கு அதிகப்படியான வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தால், ஆப்பிள் போன்களின் தயாரிப்புக்கு இந்தியாவை நோக்கி நகர்ந்தது.
ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்களை இந்தியாவில் தயாரித்தால் 25 சதவிகித இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். இந்த மிரட்டலையும் மீறி, ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் 12 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என அறிவித்துள்ளது.
இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பதவி ஏற்ற முதல் நாளில் இருந்தே வரி பஞ்சாயத்தில் ஈடுபட்டு வருகிறார் டொனால்ட் ட்ரம்ப். மற்ற நாடுகளுக்கு பரஸ்பர வரி என மிரட்டல் விடுத்து வரும் அவர், தற்போது தனது கட்டளைகளை மீறும் அமெரிக்க நிறுவனங்களுக்கும் வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ளார். இதில் மாட்டிக்கொண்டிருப்பது பிரபல போன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள்.
அமெரிக்காவில் விற்கப்படும் ஐபோன்கள் அமெரிக்காவிலேயே தயாரிக்கப்பட வேண்டும் என்றும் அவற்றை இந்தியாவிலோ வேறு நாடுகளிலோ தயாரிக்க கூடாது என்று கூறியுள்ளார் ட்ரம்ப். ட்ரம்பின் உத்தரவை மீறினால் 25 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
ஆனால் ட்ரம்பின் எச்சரிக்கையையும் மீறி, ஆப்பிள் நிறுவனம், இந்தியாவில் 1.5 பில்லியன் டாலர் மதிப்பிலான தனது module பிளான்டை விரிவுபடுத்தும் நடவடிக்கை தொடரும் என கூறியுள்ளது. மேலும், தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில் ஸ்மார்ட் போன் டிஸ்ப்ளே module யூனிட்டை அமைக்க Yuzhan Technologies-சில் 1.49 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய உள்ளதாக Foxconn தெரிவித்துள்ளது.
ஆப்பிள் போன்கள் அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படாத நிலையில், அந்த நிறுவனம் சீனாவையே நம்பியுள்ளது. சீனாவுக்கு அதிகப்படியான வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தால், ஆப்பிள் போன்களின் தயாரிப்புக்கு இந்தியாவை நோக்கி நகர்ந்தது அந்த நிறுவனம். தயாரிப்பு செலவு, ஊதியம் ஆகியவை அமெரிக்காவை விட இந்தியாவில் குறைவாக உள்ளதால், ஆப்பிள் இந்த முடிவை எடுத்துள்ளது.
இதேபோன்றதொரு அச்சுறுத்தலை ஆப்பிள் நிறுவனத்தின் போட்டியாளரான சாம்சங்கிற்கும் ட்ரம்ப் விடுத்துள்ளார். தென் கொரிய நிறுவனமான சாம்சங்கின் தொலைபேசிகள் அமெரிக்காவில் தயாரிக்கப்படாவிட்டால் 25 சதவிகித இறக்குமதி வரியை எதிர்கொள்ள நேரிடும் என்றும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
ட்ரம்பின் மிரட்டலுக்கு பணியாமல் ‘தக் லைஃப்’ செய்த ஆப்பிள்.. தமிழ்நாட்டிற்கு அடித்த ஜாக்பாட்!


