அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது 80வது பிறந்தநாளை அணுகிக் கொண்டிருக்கும் நிலையில், அவரது உடல்நிலை மற்றும் வயது மீதான பொதுமக்கள் கவனம் மீண்டும் அதிகரித்துள்ளது.
குறிப்பாக, சமீபத்திய மருத்துவ பரிசோதனைக்காக அவர் Walter Reed National Military Medical Center சென்றிருப்பது அரசியல் மற்றும் ஊடக வட்டாரங்களில் புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அமெரிக்க ஊடகமொன்று வெளியிட்ட பகுப்பாய்வில், “முதிர்ந்த வயதும் உயிருக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல்களும் டிரம்பிற்கு அவரது மரணத்தை நினைவூட்டுகின்றன” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தாக்குதல் முயற்சிகள்
கடந்த ஆண்டுகளில் அவருக்கு எதிராக நடந்த தாக்குதல் முயற்சிகள் மற்றும் தொடர்ச்சியான பாதுகாப்பு அச்சங்கள், அவரது அரசியல் நடத்தை மற்றும் பொதுப் பேச்சுகளில் மாற்றங்களை உருவாக்கியிருக்கலாம் என அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

ட்ரம்ப் தனது உடல்நிலை மிகச் சிறப்பாக உள்ளது என்று சமூக ஊடகங்களில் தெரிவித்திருந்தாலும், அவரது வயது, உடல்நல குறித்த வெளிப்படைத்தன்மை, மற்றும் தலைமைத்திறன் பற்றிய கேள்விகள் அமெரிக்க அரசியலில் தொடர்ந்து பேசப்பட்டு வருகின்றன.
சமீபத்திய கருத்துக்கணிப்புகளில், அவரது உடல் மற்றும் மனத் திறன் குறித்து பொதுமக்களில் ஒரு பகுதி கவலை வெளியிட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
வெள்ளை மாளிகை தரப்பு, ட்ரம்ப் இன்னும் மிகச் சுறுசுறுப்பாகவும் வலிமையாகவும் செயல்படுகிறார் என்று வலியுறுத்தி வருகிறது.
அதேவேளை, மருத்துவ நிபுணர்கள் வயதான தலைவர்களின் உடல்நிலை குறித்து அதிக வெளிப்படைத்தன்மை தேவைப்படுவதாகக் கூறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

