• Login
Tuesday, March 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ட்ரம்பின் திட்டத்துக்கு மத்தியில் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையை மறுத்த ஈரான்

GenevaTimes by GenevaTimes
March 24, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ட்ரம்பின் திட்டத்துக்கு மத்தியில் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையை மறுத்த ஈரான்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களை ஐந்து நாட்களுக்கு ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில் ஈரான் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையை மறுத்த கருத்தானது மத்தியக்கிழக்கு பதற்றத்தில் பல கேள்விகளை தூண்டியுள்ளது.

மிகவும் நல்ல மற்றும் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாகக் கூறிய அவர், இந்த ஒத்திவைப்பு மத்திய கிழக்கில் உள்ள பகைமையை முழுமையாகத் தீர்க்கும் நோக்கில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

ஆக்கப்பூர்வமான உரையாடல்

ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,

“ஈரானுடன் நடைபெற்ற ஆழமான, விரிவான மற்றும் ஆக்கப்பூர்வமான உரையாடல்களின் அடிப்படையில், இரானிய மின் நிலையங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான எந்த ராணுவத் தாக்குதலையும் ஐந்து நாட்களுக்கு ஒத்திவைக்குமாறு பாதுகாப்புத் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்” என்று கூறினார்.

இந்தப் பேச்சுகள் வெற்றிகரமாக அமையுமா என்பதைப் பொறுத்தே இந்த முடிவு இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த சனிக்கிழமை அன்று ட்ரம்ப், ஹார்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) 48 மணி நேரத்துக்குள் முழுமையாகத் திறக்காவிட்டால் ஈரானின் மின் உற்பத்தி நிலையங்களை “அழித்துவிடுவோம்” என்று எச்சரித்திருந்தார்.

இந்த எச்சரிக்கைக்குப் பின்னர், திங்கள்கிழமை காலை இந்த ஒத்திவைப்பு அறிவிப்பு வெளியானது.

இந்த அறிவிப்புக்குப் பிறகு உலகப் பங்குச் சந்தைகள் உயர்ந்தன. எண்ணெய் விலை குறிப்பிடத்தக்க அளவில் வீழ்ச்சியடைந்து. ஒரு பீப்பாய் 100டொலருக்குகீழ் சென்றது.

இந்நிலையிலேயே ஈரான் மறுப்பு
ஈரான் உடனடியாக இந்தக் கூற்றை மறுத்துள்ளது.

ஈரானிய வெளியுறவு அமைச்சகம் மற்றும் அரசு ஊடகங்கள், “அமெரிக்காவுடன் எந்த நேரடி அல்லது மறைமுக பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தன.

ட்ரம்பின் அறிவிப்பை பின்வாங்கல் அல்லது எண்ணெய் விலையைக் குறைக்கும் தந்திரம் என்று விமர்சித்த ஈரான், ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்கும் வரை தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டை வலியுறுத்தியது.

ஈரான் மேலும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்களை நிறுத்தாவிட்டால், வளைகுடா பகுதியில் உள்ள எரிசக்தி மற்றும் நீர் உள்கட்டமைப்புகளைத் தாக்கும் திட்டங்களைத் தயாரித்து வருவதாக எச்சரித்துள்ளது.

பின்னணி
இந்த சம்பவம், அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டணிக்கும் ஈரானுக்கும் இடையிலான சுமார் ஒரு மாத கால போரின்  ஒரு பகுதியாகும்.

ட்ரம்பின் ஒத்திவைப்பு தற்காலிக நிம்மதியை ஏற்படுத்தியிருந்தாலும், இஸ்ரேல் தொடர்ந்து ஈரானில் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

மேலும், ஈரான் பதிலடி கொடுக்கும் அச்சுறுத்தலைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

இதன்படி அடுத்த ஐந்து நாட்களில்  என்ன நடக்கும் என்பது இப்போது மிக முக்கியமான கேள்வியாக உள்ளது. 

Read More

Previous Post

மோதிவிட்டு நிற்காமல் சென்ற விபத்து நடந்து 9 மாதங்களுக்குப் பிறகு உயிரிழந்த போலீஸ்காரர் | Makkal Osai

Next Post

Gold Price Fall | மீண்டும் சர்ரென குறைந்தது தங்கம் விலை.. நகை பிரியர்களுக்கு வரப்பிரசாதம்.. இன்றைய நிலவரம் என்ன? | வணிகம் போட்டோகேலரி

Next Post
Gold Price Fall | மீண்டும் சர்ரென குறைந்தது தங்கம் விலை.. நகை பிரியர்களுக்கு வரப்பிரசாதம்.. இன்றைய நிலவரம் என்ன? | வணிகம் போட்டோகேலரி

Gold Price Fall | மீண்டும் சர்ரென குறைந்தது தங்கம் விலை.. நகை பிரியர்களுக்கு வரப்பிரசாதம்.. இன்றைய நிலவரம் என்ன? | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin