Singapore TOTO: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டோட்டோ குலுக்கலின் நேற்றைய (ஜூலை 31) முடிவில், குரூப் 1 ஜாக்பாட் பரிசான சுமார் S$12.83 மில்லியன் தொகையை ஒருவர் தட்டித் தூக்கினார்.
வெற்றி பெற்ற அந்த டிக்கெட் QuickPick Ordinary Entry முறை மூலம் இணையம் வழியாக வாங்கப்பட்டது என்று Singapore Pools தரவுகள் கூறுகின்றன.
லிட்டில் இந்தியாவில் வாங்கப்பட்ட TOTO டிக்கெட்டுக்கு S$1.18 மில்லியன் பரிசு!
டோட்டோ (TOTO) ஜாக்பாட்
இதில் வெற்றி பெற்ற எண்கள்: 7, 19, 20, 21, 22, 29 மற்றும் கூடுதல் எண் 37 ஆகும்.
முதல் ஜாக்பாட் பரிசுத் தொகை S$12,827,485 என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் 19, 20, 21, 22 என்ற தொடர் வரிசை எண்கள் டோட்டோவில் தேர்வாகியுள்ளது இதுவே முதல்முறை.
இரண்டாம் பரிசை 20 பேர் வென்றனர், ஒவ்வொரு வெற்றியாளருக்கும் சுமார் S$73,408 என்ற தொகை பிரித்து கொடுக்கப்படும்.
QuickPick Ordinary Entry முறையில் கணினி தானாகவே நமக்கான லாட்டரி எண்களை தேர்ந்தெடுத்து கொடுக்கும்.
4D லாட்டரி மோகம்.. “7217” என்ற எண்ணுக்கு மட்டும் வாடிக்கையாளர்கள் போட்டாபோட்டி – ஏன் தெரியுமா?