Last Updated:
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை அமைதிக்கான நோபல் பரிசுக்காக பரிந்துரைத்தார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை அமைதிக்கான நோபல் பரிசுக்காக பரிந்துரைப்பதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அரசின் தலைமையகமான வெள்ளை மாளிகையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு டிரம்ப் இரவு விருந்து வைத்தார். இதில் பங்கேற்க வந்த நெதன்யாகு மற்றும் அவரது மனைவியை டிரம்ப் வாசலில் வந்து வரவேற்றார்.
விருந்தின்போது அமெரிக்க அரசின் உச்ச பொறுப்பில் இருப்பவர்கள் பங்கேற்றனர். பின்னர், டிரம்ப்பை நோபல் பரிசுக்காக பரிந்துரைத்து தாம் அனுப்பிய கடிதத்தின் நகலை டிரம்ப்பிடம் நெதன்யாகு வழங்கினார்.
அதுகுறித்து நெதன்யாகு தெரிவித்தபோது, நான் உங்களின் பெயரை அமைதிக்கான நோபல் பரிசு வழங்க நோபல் பரிசு குழுவிடம் பரிந்துரை செய்துள்ளதாகவும், அதற்கு நீங்கள் மிகவும் தகுதியானவர் என்றும், அதை நீங்களே வாங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
நெதன்யாகுவுக்கு நன்றி தெரிவித்த டிரம்ப், அவர் தன்னை பரிந்துரை செய்திருப்பது மிக முக்கியமானது, அதனை எதிர்பார்க்கவில்லை என தெரிவித்தார். ஈரான் மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தி உள்ள நிலையில், காசாவில் 60 நாள் போர் நிறுத்தம் தொடர்பாக இந்த சந்திப்பின் போது ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
July 08, 2025 12:53 PM IST