Last Updated:
டிரம்ப்பின் அதிரடி நடவடிக்கையால் அமெரிக்காவுக்கு நலன்கள் ஏற்பட்டாலும் அது உலக நாடுகளை பாதிக்கும் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிரேசில் நாட்டுப் பொருட்கள் இறக்குமதி செய்வதற்கான வரி விதிப்பை 50 சதவீதமாக உயர்த்தி உத்தரவிட்டுள்ளார். இதனால் பிரேசில் நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்றதிலிருந்து பொருளாதார ரீதியாக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். சில வாரங்களுக்கு முன்பாக சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதிப்பை அதிகப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து சீனாவும் அமெரிக்கப் பொருட்களுக்கு வரி விதிப்பை அதிகரித்தது.
இரு வல்லரசு நாடுகளும் மாறி மாறி வரியை உயர்த்திக் கொண்டே சென்றதால் உலகில் நிலையற்ற பொருளாதார நிலைமை ஏற்பட்டது. தற்போது இரு நாடுகளும் வரி விதிப்பு விவகாரத்தில் சுமூக நிலைமையை எட்டியுள்ளன. இருப்பினும் அமெரிக்கா தொடர்ந்து தங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரியை கணிசமாக உயர்த்தி வருகிறது.
அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்தியப் பொருள்களுக்கு 25 சதவீத வரி விதிப்பு விதிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய உயர்த்தப்பட்ட வரி விதிப்பு ஆகஸ்ட் 1ஆம் தேதி நாளை முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தென் அமெரிக்கா நாடான பிரேசிலுக்கு அமெரிக்கா முன்பு 10 சதவீத வரி விதித்திருந்தது.
இந்நிலையில் கூடுதலாக 40% வரி விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த புதிய கூடுதல் வரி விதிப்பு 7 நாட்களில் நடைமுறைக்கு வரும் என்று வெள்ளை மாளிகை செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது. டொனால்ட் டிரம்ப்பின் அதிரடி நடவடிக்கையால் அமெரிக்காவுக்கு நலன்கள் ஏற்பட்டாலும் அது உலக நாடுகளை பாதிக்கும் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
July 31, 2025 6:25 PM IST
டொனால்ட் டிரம்பின் அடுத்த அதிரடி.. பிரேசில் நாட்டுக்கு 50 சதவீத வரி விதித்தது அமெரிக்கா..