டிரக்டேஹ்ராடூனில், விருந்துக்குச் சென்று திரும்பியவர்களின் இரவுப் பயணம் மிகக் கொடூரமான விபத்தில் முடிந்துள்ளது. இதில் காரில் வந்த 6 இளம் உயிர்கள் பறிபோனது.
அதிகவேகத்தில் வந்த எம்யுவி கார், சாலையில் கண்டெய்னர் லாரி மீது மோதியதில், ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். டேஹ்ராடூனைச் சேர்ந்த பெண்கள உள்பட 5 பேரும், ஹிமாசலைச் சேர்ந்த ஒருவரும் இந்த விபத்தில் பலியாகினர்.
இந்த விபத்தில் ஒரே ஒருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக இருந்தாலும், அவரால் விபத்து குறித்து எதையும் நினைவுகூற முடியவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சித்தேஷ் என்பவர் அளித்த விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு இளைஞர்கள் ஊர் திரும்பிக்கொண்டிருந்தபோது இந்த விபத்து நேரிட்டுள்ளது. இந்த விபத்தில், கண்டெய்னர் லாரி ஓட்டுநர் மீது எந்த தவறும் இல்லை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
காரின் ஓட்டுநர், உரிமையாளர் யாருமே இப்போது உயிரோடு இல்லை, விபத்தில் இறந்துவிட்டார்கள் என்பதால், இறந்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய முடியாது என்பதால், இந்த வழக்கில் சட்ட நிபுணர்களிடம் ஆலோசனை கேட்கப்பட்டிருப்பதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
மிகவும் புத்தம் புதிதான எம்யுவி கார், இன்னும் வாகன எண் பலகைக் கூட பொருத்தப்படாமல், இந்த விபத்தில் சிக்கி உருகுலைந்துபோயிருக்கிறது.

