Last Updated:
இந்த கையகப்படுத்தும் செயல்முறை இம்மாத இறுதிக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதானி குழுமத்தின் முதன்மையான நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட்டின் கூட்டு நிறுவனம், ரூ. 231.34 கோடிக்கு ‘டிரேட் கேஸில் டெக் பார்க் பிரைவேட் லிமிடெட்’ (Trade Castle Tech Park Pvt Ltd – TCTPPL) என்ற நிறுவனத்தை முழுமையாக அதாவது அதன் 100% பங்குகளை கையகப்படுத்தியுள்ளது.
இந்த TCTPPL நிறுவனம் உட்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளும் நிறுவனமாகும். தற்போது இந்த கையகப்படுத்துதல் நடவடிக்கை வர்த்தக உலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
TCTPPL நிறுவனத்தை வாங்கியுள்ள அதானி கனெக்ஸ் நிறுவனமானது, அதானி மற்றும் முன்னணி உலகளாவிய டேட்டா சென்டர் ஆப்பரேட்டரான எட்ஜ்கனெக்ஸ் நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள 50:50 கூட்டு நிறுவனமாகும்
அடுத்த பத்தாண்டுகளில் இந்தியாவில் 1 ஜிகாவாட் திறன் கொண்ட தேசிய டேட்டா சென்டர் தளத்தை உருவாக்குவதே அதானிகனெக்ஸின் முக்கிய இலக்காக உள்ளது.
அதானி நிறுவனத்தால் வாங்கப்பட்டுள்ள TCTPPL நிறுவனம் மகாராஷ்டிராவை தளமாகக் கொண்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனம் (Infrastructure Development Company) ஆகும்.
இந்த நிறுவனம் இன்னும் தனது செயல்பாட்டை தொடங்கவில்லை. ஆனால் அதற்கான உரிமங்களையும், செயல்பாட்டிற்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்துள்ளது.
ரூ. 231.34 கோடி மதிப்பீட்டில் இந்த கையகப்படுத்துதல் நடந்திருக்கிறது. இதில் முழு தொகையும் பணமாக வழங்கப்படும். இந்த கையகப்படுத்தும் செயல்முறை இம்மாத இறுதிக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
November 24, 2025 6:59 PM IST
டேட்டா சென்டர் விரிவாக்கம்: ரூ. 231 கோடியில் டிரேட் கேஸ்டில் நிறுவனத்தை வாங்கியது அதானி கனெக்ஸ்


