Last Updated:
இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவிந்திர ஜடேஜா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்
டெஸ்ட் போட்டிகளில் 3 முறை தொடர் நாயகன் விருதை வென்றுள்ள நிலையில் இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவிந்திர ஜடேஜா விராட் கோலி, சவுரவ் கங்குலி உள்ளிட்டோருடன் சாதனை பட்டியலில் இணைந்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. முதல் போட்டி அகமதாபாத்தில் நடந்த போது, அதில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.
அதைத் தொடர்ந்து இரண்டாவது போட்டி டெல்லியில் கடந்த 10ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. முதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி முழுமையாக இந்தியாவிடம் சரண்டர் அடைந்தாலும், இரண்டாவது டெஸ்டில் ஓரளவு வெற்றி பெற போராடியது. இதனால் ஆட்டம் 5ஆம் நாள் வரை சென்றது. இந்த போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை வென்றது.
2 போட்டிகளிலும் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவிந்திர ஜடேஜா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். இதனால் அவருக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.
இதன் மூலம் அதிகமுறை தொடர் நாயகன் விருது வென்றவர்கள் பட்டியலில் ரவிந்திர ஜடேஜா இணைந்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 11 முறை தொடர் நாயகன் விருது வென்று பட்டியலில் ரவிச்சந்திரன் அஷ்வின் முதலிடத்தில் உள்ளார்.
வீரேந்தர் சேவாக், ஹர்பஜன் சிங் ஆகியோர் தலா 5 முறை தொடர் நாயகன் விருது வென்றுள்ளனர். ஹர்பஜன் சிங், கபில் தேவ், அனில் கும்ப்ளே, ராகுல் டிராவிட் ஆகியோர் தலா 4 முறை தொடர் நாயகன் விருது வென்றுள்ளார்கள்.
October 14, 2025 10:37 PM IST