Last Updated:
இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கிறார்
ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்திய அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 5 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
நடைபெற்று முடிந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பான ஆட்டத்தை ஜெய்ஸ்வால் வெளிப்படுத்திய நிலையில், இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதேபோன்று பவுலர் குல்தீப் யாதவும் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளார்.
மூத்த பேட்ஸ்மேன்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஏற்கனவே ஓய்வை அறிவித்துள்ள நிலையில் அவர்கள் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் பின்தங்கியுள்ளனர். பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் 5 ஆம் இடம் பிடித்துள்ள ஜெய்ஸ்வால் 791 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.
டெஸ்ட் பவுலர்களில் குல்தீப் யாதவ் 7 இடங்கள் முன்னேறி 14 ஆவது இடத்தில் உள்ளார். ஒருநாள் பேட்ஸ்மேன்களில் கேப்டன் சுப்மன் கில் முதலிடம் வகிக்கிறார். 753 புள்ளிகளுடன் இந்திய அணியின் ரிஷப் பந்த் 8 ஆம் இடம் வகிக்கிறார்.
இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கிறார். ஒருநாள் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் ஆப்கன் அணியின் இப்ராகிம் ஜத்ரான் 764 புள்ளிகளுடன் 8 இடங்கள் முன்னேறி 2 ஆம் இடத்தை பிடித்துள்ளார். 756 புள்ளிகளுடன் ரோஹித் சர்மா 3 ஆம் இடத்தில் உள்ளார்.
ஒருநாள் போட்டிகளுக்கான ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் ஆப்கன் அணியின் அஸ்மதுல்லா ஒமர்சாய் முதலிடம் வகிக்கிறார்.
October 15, 2025 10:21 PM IST