Last Updated:
சமீபத்தில் நடைபெற்ற முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா முதன் முறையாக ஐசிசி கோப்பையை கைப்பற்றியது
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணி முன்னேற்றம் கண்டுள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதை தொடர்ந்து தரவரிசை பட்டியலில் முன்னேறியுள்ளது.
2ஆண்டுகளுக்கு ஒரு முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறுகிறது. 2 ஆண்டுகளில் ஒரு அணி பெறக்கூடிய அதிகபட்ச வெற்றி சதவீதத்தின் அடிப்படையில் அந்த அணி இறுதிப் போட்டிக்கு தேர்வு ஆகும். இதற்கான தரவரிசை பட்டியல் அவ்வப்போது அப்டேட் செய்யப்படுகிறது.
போட்டி தொடங்குவதற்கு முன்பு வரையில் எந்த 2 அணிகள் அதிக வெற்றி சதவீதத்தை பெற்றுள்ளதோ அவை சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடும். சமீபத்தில் நடைபெற்ற முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா முதன் முறையாக ஐசிசி கோப்பையை கைப்பற்றியது.
இந்நிலையில் 2027 ஆம் ஆண்டுக்கான டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் தரவரிசை பட்டியல் அவ்வப்போது அப்டேட் செய்யப்பட்டு வருகிறது. இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த கடந்த போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்து இருந்ததால் தரவரிசை பட்டியல் பின்தங்கி இருந்தது.
இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதை தொடர்ந்து தரவரிசை பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளன.
July 07, 2025 3:32 PM IST