• Login
Friday, July 4, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

டெஸ்ட் கிரிக்கெட்டில் சுனில் கவாஸ்கரின் நீண்ட ஆண்டுகள் சாதனையை முறியடித்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்

GenevaTimes by GenevaTimes
March 7, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
டெஸ்ட் கிரிக்கெட்டில் சுனில் கவாஸ்கரின் நீண்ட ஆண்டுகள் சாதனையை முறியடித்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


டெஸ்ட் போட்டிகளில் சுனில் கவாஸ்கர் சாதனையை முறியடித்து அதிவேகமாக 1000 ரன்களை கடந்த இந்தியர் என்ற சாதனையை இளம்  பேட்ஸ்மேன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஏற்படுத்தியுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மட்டும் யஷஸ்வி 700-க்கும் அதிகமான ரன்களை குவித்துள்ளார். தற்போது இரு அணிகளுக்கு இடையிலான 5 ஆவது டெஸ்ட் போட்டி இமாசல பிரதேசம் தர்மசாலாவில் நடந்து வருகிறது.

முதலில் பேட்டிங் செய்துள்ள இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 218 ரன்களை எடுத்துள்ளது. இதையடுத்து முதல் நாளில் 30 ஓவர்கள் பேட்டிங் செய்துள்ள இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

விளம்பரம்

இதன் மூலம் யஷஸ்வி ஜெய்ஸ்வால் டெஸ்ட் போட்டிகளில் 1000 ரன்களை கடந்து 1,028 ரன்கள் எடுத்துள்ளார். இந்த ரன்களை எடுப்பதற்கு அவருக்கு 9 டெஸ்ட் போட்டிகளும் 16 இன்னிங்ஸ்களும் தேவைப்பட்டன. முன்பு 11 போட்டிகளில் சுனில் கவாஸ்கர், செதேஷ்வர் புஜாரா 1000 ரன்களை கடந்ததே இந்திய வீரர் செய்த சாதனையாக இருந்தது. இதனை தற்போது யஷஸ்வி முறியடித்துள்ளார்.

இதேபோன்று 1000 ரன்களை கடந்த 4 ஆவது இளம் இந்திய வீரர் என்ற புதிய ரிக்கார்டையும் அவர் ஏற்படுத்தியுள்ளார். 22 வயது 70 நாளில் யஷஸ்வி டெஸ்டில் ஆயிரம் ரன்களை கடந்துள்ளார். முதலிடத்தில் 19 வயது 217 நாட்களில் சச்சின் டெண்டுல்கரும், 2 ஆவது இடத்தில் 21 வயது 27 நாட்களில் கபில் தேவும், 3 ஆவது இடத்தில் 21 வயது 197 நாட்களில் ரவி சாஸ்திரியும் உள்ளனர்.

விளம்பரம்

இதையும் படிங்க – இங்கிலாந்துக்கு எதிரான 5 ஆவது டெஸ்ட் போட்டி… முதல் நாளிலேயே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி…

2023 ஆகஸ்ட்டில் வெஸ்ட் இண்டீசிற்கு எதிராக டெஸ்ட் தொடரில் அறிமுகமான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 9 போட்டி மற்றும் 16 இன்னிங்ஸ்களில் விளையாடி 1,028 ரன்கள் எடுத்துள்ளார். இவற்றில் 2 இரட்டை சதங்களும், 3 சதங்களும், 3 அரைச்சதங்களும் அடங்கும்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

Read More

Previous Post

DGP About Jafar Sadiq: ’ஜாபர் சாதிக் உடன் இருக்கும் போட்டோ!’ மனம் திறந்த டிஜிபி சங்கர் ஜிவால்!-dgp shankar jiwal has explained about the photo with jafar sadiq

Next Post

புதிய உச்சம் தொட்ட ஐஷா் வருவாய்

Next Post
புதிய உச்சம் தொட்ட ஐஷா் வருவாய்

புதிய உச்சம் தொட்ட ஐஷா் வருவாய்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin