• Login
Sunday, March 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

டெல்லி ஸ்டேடியத்தை 102 ஏக்கரில் விளையாட்டு நகரமாக மாற்ற திட்டம் | Plans to turn Delhi Stadium into a sports city on 102 acres

GenevaTimes by GenevaTimes
November 11, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
டெல்லி ஸ்டேடியத்தை 102 ஏக்கரில் விளையாட்டு நகரமாக மாற்ற திட்டம் | Plans to turn Delhi Stadium into a sports city on 102 acres
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: டெல்​லி​யில் உள்ள ஜவஹர்​லால் நேரு ஸ்டேடி​யம் இடிக்​கப்பட உள்​ளது. அதற்கு பதிலாக அதிநவீன வசதி​களு​டன் 102 ஏக்​கரில் விளை​யாட்டு நகரம் உரு​வாக்​கப்பட உள்​ளது.

மத்​திய விளை​யாட்​டுத்​துறை அமைச்​சகத்​தின் அதி​காரப்​பூர்வ தகவலின்​படி, ஐவஹர்​லால் நேரு ஸ்டேடி​யம் இடிக்​கப்​பட்​டு, அனைத்து முக்​கிய விளை​யாட்​டுப் பிரிவு​களுக்​கும் மைதானங்​கள், வீரர்​களுக்​கான குடி​யிருப்பு வசதி​கள் கொண்ட ஒரு விளை​யாட்டு நகரம் உரு​வாக்​கப்​படு​கிறது. எனினும் இந்​தத் திட்​டம் இன்​னும் ஆரம்​பகட்ட யோசனை நிலை​யிலேயே உள்​ளது.

இந்​தத் திட்​டத்​திற்​காக உலகம் முழு​வ​தி​லும் இது போன்ற திட்​டங்​கள் செயல்​படுத்​தப்​பட்ட பல்​வேறு மாதிரி​களை அரசு ஆய்வு செய்து வரு​கிறது. இந்த வகை​யில் கத்​தார் மற்​றும் ஆஸ்​திரேலி​யா​வில் உள்ள விளை​யாட்டு நகரங்​கள் ஆய்வு செய்​யப்​பட்டு வரு​கின்​றன. மத்​திய விளை​யாட்​டுத்​துறை அமைச்​சர் மன்​சுக் மாண்​ட​வியா சமீபத்​தில் தோகா​வில் உள்ள விளை​யாட்டு நகரத்தை பார்​வை​யிட்​டுள்​ள​தாக கூறப்​படு​கிறது.

1982-ம் ஆண்டு டெல்​லி​யில் நடை​பெற்ற ஆசிய விளை​யாட்​டுப் போட்​டிகளுக்​காக ஜவஹர்​லால் நேரு ஸ்டேடி​யம் கட்​டப்​பட்​டது. 60 ஆயிரம் இருக்​கைகள் கொண்ட இந்த மைதானத்​தில் கடந்த 2010-ம் ஆண்டு காமன்​வெல்த் விளை​யாட்​டுப் போட்​டிகள் மற்​றும் 2017-ம் ஆண்டு யு-17 ஃபிபா உலகக் கோப்பை போட்​டிகள் நடை​பெற்​றுள்​ளன.

2010-ம் ஆண்டு காமன்​வெல்த் விளை​யாட்​டுப் போட்​டிகளுக்​காக மைதானம் ரூ.961 கோடி செல​வில் புதுப்​பிக்​கப்​பட்​டது. சமீபத்​தில், இந்த மைதானத்​தில் உலக பாரா தடகள சாம்​பியன்​ஷிப் போட்டி நடை​பெற்​றது. இதற்காக ரூ.50 கோடி செலவில் மைதானம் சீரமைக்கப்பட்டு இருந்தது.

தற்​போது மைதான வளாகத்​தில் கால்​பந்து மைதானம், தடகளப் பாதை தவிர, வில்​வித்தை அகாட​மி, பாட்​மிண்​டன் ஆடு​களங்​கள், இந்​திய விளை​யாட்டு ஆணை​யத்​தின் அலு​வல​கம், தேசிய ஊக்​க மருந்து தடுப்பு முகமை மற்​றும் தேசிய ஊக்​க மருந்து பரிசோதனை ஆய்​வகம் ஆகியவை உள்​ளன. விளை​யாட்டு நகரம் தொடங்​கப்​படு​வதற்​கான பணி​கள் தொடங்​கிய​வுடன் இந்த அலு​வல​கங்​களும் இடமாற்​றம் செய்​யப்​படும். அதே​போல் முக்​கிய மைதான​மும் இடிக்​கப்​படும்.

குடி​யிருப்பு வளாகங்​கள் கட்​டப்​படும். இதனால் போட்​டி​யில் வரும் வீரர், வீராங்​க​னை​கள் இங்​கேயே தங்​கு​வதற்​கான வசதி​களும் ஏற்​படுத்​தப்​படும். மைதான வளாகத்​தின் 102 ஏக்​கர் பரப்​பளவை​யும் பயன்​படுத்​திக் கொள்ள திட்​ட​மிடப்​பட்டு வரு​கிறது. ஏனெனில் தற்​போது 100 ஏக்​கர் பரப்​பளவு விளை​யாட்​டுக்கு உகந்த அளவில் பயன்​படுத்​தப்​ப​டா​மல் உள்​ளது.

டெல்லி மைதான வட்​டாரங்கள் கூறும்​போது, “தற்​போது இது ஒரு யோசனை​தான், ஆனால் சாத்​தி​யக்​கூறு ஆய்வு எவ்​வாறு செயல்​படு​கிறது என்​பதை பார்க்​கவேண்​டும். ஆனால்​ மத்​தி​ய விளை​யாட்​டுத்​துறை அமைச்​சகம்​ மிக​வும்​ தீவிர​மாக உள்​ளது” என்று தெரிவித்தன.



Read More

Previous Post

Bihar Election | இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு நிறைவு; மொத்தம் 68% வாக்குப் பதிவு | இந்தியா

Next Post

மறுசீரமைக்கப்பட உள்ள இரண்டு அரச வங்கிகள்

Next Post
மறுசீரமைக்கப்பட உள்ள இரண்டு அரச வங்கிகள்

மறுசீரமைக்கப்பட உள்ள இரண்டு அரச வங்கிகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin