• Login
Wednesday, March 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

டெல்லி வெடிகுண்டு சம்பவம் முடிந்து இரண்டாம் நாள்.. வாரணாசி ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்! | இந்தியா

GenevaTimes by GenevaTimes
November 12, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
டெல்லி வெடிகுண்டு சம்பவம் முடிந்து இரண்டாம் நாள்.. வாரணாசி ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்! | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:November 12, 2025 6:47 PM IST

டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடிகுண்டு சம்பவம் நடந்த இரண்டாம் நாளான இன்று வாரணாசிக்கு இயக்கப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்திருக்கிறது.

மாதிரி படம்
மாதிரி படம்

டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் கேட் 1 அருகே கடந்த 10ஆம் தேதி மாலை 6.50 மணிக்கு கார் வெடிகுண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இந்தச் சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதில் 13 பேர் பலியாகியுள்ள நிலையில், 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த வெடிகுண்டு சம்பவத்தில் தொடர்புடையதாக காஷ்மீரை சேர்ந்த மருத்துவர் முஷாமில் கானேய் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதையடுத்து உத்தரபிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த பெண் மருத்துவர் ஷாஹீன் ஷாஹித் என்பவர் கைது செய்யப்பட்டார். லால் பாக் பகுதியை சேர்ந்த மருத்துவர் ஷாஹீன் ஷாஹித்தின் காரில் இருந்து துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

முஷாமில் கானேய் உடன் அவர் நெருங்கிய தொடர்பில் இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து டெல்லி காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் மகளிர் பிரிவான ஜமாத் உல் மொமினாத் அமைப்பின் இந்திய பிரிவை ஷாஹீன் ஷாஹித் நிறுவி தலைமை வகித்து வந்தது கண்டறியப்பட்டுள்ளது. தற்போது இந்த விவகாரத்தை என்.ஐ.ஏ. விசாரித்து வருகிறது.

“One of our flights to Varanasi received a security threat. In line with protocol, the Government-appointed Bomb Threat Assessment Committee was immediately alerted, and all necessary security procedures promptly initiated. The flight landed safely and all passengers have been…


— ANI (@ANI) November 12, 2025

இந்நிலையில், வாரணாசிக்கு இயக்கப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்ப்ரஸ் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஏர் இந்தியா செய்தி தொடர்பாளர் கூறியதாவது: “வாரணாசிக்குச் செல்லும் எங்கள் விமானங்களில் ஒன்று பாதுகாப்பு அச்சுறுத்தலைப் பெற்றது.

உடனே விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டு, பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து, வெடிகுண்டு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் உடனடியாக எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து பாதுகாப்பு சோதனைகளும் முடிந்ததும் விமானம் இயக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

November 12, 2025 6:42 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

டெல்லி வெடிகுண்டு சம்பவம் முடிந்து இரண்டாம் நாள்.. வாரணாசி ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

Read More

Previous Post

கனடாவில் கல்வி அனுமதி பெற காத்திருப்போருக்கு மகிழ்ச்சித் தகவல்

Next Post

தைவானை மிரட்டும் ‘பங்வோங்’ புயல் – 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளில் இருந்து வெளியேற்றம் | Makkal Osai

Next Post
தைவானை மிரட்டும் ‘பங்வோங்’ புயல் – 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளில் இருந்து வெளியேற்றம் | Makkal Osai

தைவானை மிரட்டும் ‘பங்வோங்’ புயல் - 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளில் இருந்து வெளியேற்றம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin