Last Updated:
டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் ஏர் இந்தியா பேருந்து தீப்பிடித்து எரிந்தது அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
டெல்லி விமான நிலையத்தில் ஏர் இந்தியாவுக்கு சொந்தமான பேருந்து, அதன் விமானத்தின் அருகிலேயே தீப் பிடித்து எரிந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் மூன்றாவது முனையத்தில் ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு சொந்தமான பேருந்து, திடீரென தீப் பிடித்து எரிந்தது. இந்தச் சம்பவம் நடந்தபோது, அந்தப் பேருந்தின் அருகிலேயே ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானமும் நின்றிருந்தது.
நல்வாய்ப்பாக பேருந்து தீப் பிடித்து எரிந்தபோது, அதனுள் பயணிகள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இருந்தாலும், அருகிலேயே ஏர் இந்தியா விமானம் இருந்ததால், அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.
பேருந்து தீப் பிடித்து எரிந்ததும், விமான நிலைய தீயணைப்புத் துறையினர் துரிதமாக செயல்பட்டு, தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்து, அதனை அணைத்தனர். மேலும், பேருந்தில் ஏற்பட்ட மின் கசிவே தீப்பிடித்ததற்கு காரணமாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது. தற்போது இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்துவருகிறது.
ஏர் இந்தியா விமானத்தின் அருகிலேயே அந்த நிறுவனத்திற்கு சொந்தமான பேருந்து தீப்பிடித்து எரிந்தது சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. முன்னதாக கடந்த ஜூன் மாதம் 12ஆம் தேதி குஜராத் மாநிலம், அகமதாபாதில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியாவின் ‘ஏஐ 171’ பயணிகள் விமானம் தொழில் நுட்ப கோளாறு காரணமாக கீழே விழுந்து நொறுங்கியது.
இந்த கொடூர விபத்தில், பயணிகள், விமானிகள், விமான பணியாளர்கள் என விமானத்தில் இருந்த 260 பேரும் பலியாகினர். நல்வாய்ப்பாக லண்டன் வாழ் இந்தியர் ஒருவர் மட்டும் விமானத்தில் இருந்து வெளியே குதித்து உயிர் பிழைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
October 28, 2025 2:56 PM IST
டெல்லி விமான நிலையத்தில் ஏர் இந்தியா பேருந்து தீப் பிடித்து விபத்து… இணையத்தில் வீடியோ வைரல்


