கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் வீட்டு விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 1 ஃபைனான்ஸ் (1 Finance) அறிக்கையின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில், பெங்களூருவில் வீட்டு விலைகள் 79% அதிகரித்துள்ளன. இது இந்தியாவின் நான்கு பெரிய பெருநகரங்களான மும்பை, கொல்கத்தா, சென்னை மற்றும் தேசிய தலைநகர் டெல்லி-NCR ஐ விட அதிகமாம்.


