இதனையடுத்து, ரேகா குப்தா டெல்லி முதல்வராக பொறுப்பேற்றதுமே, தனது ஆட்சியில் 100 நாளை நிறைவு செய்து ஆட்சி நடத்தி வருகிறார். இவர் முதல்வராக பொறுப்பேற்றதுமே, முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தங்கியிருந்த அரசு பங்களாவை பயன்படுத்த மாட்டேன் எனவும், அது ஊழலின் அடையாளம் எனவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், டெல்லி முதல்வர் ரேகா குப்தாவிற்காக டெல்லியின் 6, லுட்லோ கோட்டை சாலை பகுதியில் உள்ள பங்களா 1 – ராஜ் நிவாஸ் மார்க்-ஐ ரூ. 60 லட்சம் செலவில் புனரமைக்கப்பட்டு வருகிறது. டெல்லி முதல்வர் ரேகா குப்தாவிற்கு மொத்தம் இரு பங்களா ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், பங்களா நம்பர் 1 அவர் தங்குவதற்கும், பங்களா நம்பர் 2 அவரது முகாம் அலுவலகமாக செயல்பட தயார் செய்யப்பட்டு வருகிறது.
இதற்காக கடந்த ஜூன் 28 ஆம் தேதி வெளியிடப்பட்ட டெண்டரில் ரூ. 60 லட்சம் செலவிடப்பட இருப்பதாக தெரியவந்துள்ளது. இதில், ரூ. 9.3 லட்சம் மதிப்புள்ள 4-கே டிவிகள், ரூ. 7.7 லட்சம் மதிப்புள்ள 14 ஏசிகளும், 5.74 லட்சம் மதிப்புள்ள 14 சிசிடிவி கேமராக்களும், ரூ. 2 லட்சம் மதிப்புள்ள யுபிஎஸ் ஆகியவை பொருத்தப்பட இருக்கின்றன.
மேலும், ரூ. 1.8 லட்சம் மதிப்புள்ள ரிமோட் கண்ட்ரோல் வசதி கொண்ட 23 மின் விசிறிகளும், ரூ. 85,000 மதிப்புள்ள ஒரு ஓவன், ரூ.77,000 மதிப்புள்ள ஒரு தானியங்கி வாஷிங் மெஷின், ரூ. 60,000 மதிப்புள்ள பாத்திரங்கள் கழுவும் இயந்திரம், ரூ. 63,000 மதிப்புள்ள கேஸ் ஸ்டவ், ரூ. 32,000 மதிப்புள்ள மைக்ரோவேவ், ரூ. 91,000 மதிப்புள்ள ஆறு தண்ணீர் சூடு செய்யும் இயந்திரமும் அடக்கம்.
தற்போதைக்கு டெல்லி முதல்வர் ரேகா குப்தா, தனது ஷாலிமார் பாக் சொந்த வீட்டில் தங்கியிருக்கிறார். தற்போது விடுக்கப்பட்டுள்ள 60 லட்சம் ரூபாய் டெண்டர் அடுத்த 60 நாளில் பணிகளை முடிக்கும்படி திட்டமிடப்பட்டுள்ளது. அதன்பிறகு ரேகா குப்தா, ரூ. 60 லட்சம் செலவில் புனரமைக்கப்பட்ட பங்களா 1 – ராஜ் நிவாஸ் மார்க்கிற்கு மாறுவார் எனத் தெரிகிறது.
July 02, 2025 6:30 PM IST