Last Updated:
டெல்லி போராட்ட வழக்கில் அமைதியான முறையில் மற்றும் ஆயுதங்கள் இன்றி கூடும் பொதுமக்களை சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கக் கூடாது எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டனர்.
டெல்லி போராட்டம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் சட்டத்திற்கு உட்பட்டு வேறு எந்த வகையிலும் கைது நடவடிக்கைகளோ, போக்குவரத்து கட்டுப்பாடுகளோ விதிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தலைமைச் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் சார்பில் டெல்லியில் போராட்டம் நடைபெற்றது.
இதே கோரிக்கையை முன்னிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சித் தலைவர்களை டெல்லி காவல்துறையினர் கைது செய்தனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சனிக்கிழமை அன்று மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டதுடன், பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டு, இணைய சேவையும் முடக்கப்பட்டது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி மற்றும் மோகனா ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, சட்டத்திற்கு உட்பட்டு நகரில் மக்கள் தடையின்றி நடமாட அனுமதிக்கப்பட வேண்டும் என்றும், அமைதியான முறையில் மற்றும் ஆயுதங்கள் இன்றி கூடும் பொதுமக்களை சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கக் கூடாது எனவும் உத்தரவிட்டனர்.
மெட்ரோ மற்றும் ரயில் சேவைகளை எந்தவொரு இடையூறும் இன்றி வழக்கமான கால அட்டவணைப்படி இயக்க உத்தரவிட்ட நீதிபதிகள், டெல்லி முழுவதும் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள தடுப்புகள் அனைத்தும் உடனே அகற்றப்பட வேண்டும் எனவும் ஆணையிட்டனர்.

