ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, 26 ஆம் தேதி டெல்லியில் குடியரசு தின விழா, விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் நடைபெறும் அணிவகுப்பில், பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கலாசாரத்தை வெளிப்படுத்தும் வகையில், அலங்கார வாகன ஊர்திகள் இடம்பெறுவது வழக்கமாக உள்ளது.


