Last Updated:
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை பாதுகாப்பிற்கான அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் பூடான் பயணத்தைத் தொடர்ந்து, நாளை பாதுகாப்பிற்கான அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
அண்டை நாடான பூடானுக்கு பிரதமர் மோடி இரண்டு நாட்கள் அரசுமுறைப் பயணமாக இன்று செல்கிறார். இப்பயணத்தின்போது, பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கியெல் வாங்சுக் (Jigme Khesar Namgyel Wangchuck), பிரதமர் ஷெரிங் தோபே ஆகியோரை சந்தித்து இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
மேலும், தற்போதைய மன்னரின் தந்தையும், முன்னாள் மன்னருமான ஜிக்மே சிங்கியே வாங்குசுங்கின் 70ஆவது பிறந்தநாள் விழாவிலும் பங்கேற்று சிறப்பிக்கவுள்ளார். அப்போது, இந்தியாவின் நிதியுதவியுடன் பூடானில் கட்டப்பட்டுள்ள ஆயிரத்து 20 மெகாவாட் திறன் கொண்ட மிகப்பெரிய நீர்மின் நிலையத்தை பிரதமர் மோடியும், பூடான் மன்னரும் இணைந்து திறந்து வைக்கவுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, நாளை இந்தியா திரும்பும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பிற்கான அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. அப்போது, டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து விரிவான ஆலோசனை நடைபெறும் எனக் கூறப்படுகிறது.
November 11, 2025 7:23 AM IST
டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம்.. பிரதமர் மோடி தலைமையில் நாளை பாதுகாப்பு அமைச்சரவை கூட்டம்!


