Last Updated:
டெல்லி கார் குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டோருக்கு நாடு துணை நிற்கும் என பிரதமர் நரேந்திர மோடி Thimphu விழாவில் உறுதி தெரிவித்தார். சதிகாரர்கள் தப்ப முடியாது.
டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் உள்ள சதிகாரர்கள் யாரும் தப்பிக்க முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இரண்டு நாட்கள் அரசு முறைப்பயணமாக பூடான் நாட்டிற்கு சென்றுள்ள பிரதமர் மோடி, திம்பு (Thimphu) நகரில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம் குறித்துப் பேசிய பிரதமர் மோடி, டெல்லியில் நேற்று நடந்த கோர தாக்குதல் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியிருப்பதாகக் கவலை தெரிவித்தார்.
வெடிகுண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்காக ஒட்டுமொத்த தேசமும் துணை நிற்கும் என்று கூறினார். குண்டு வெடிப்பு சம்பவத்தின் மூலக்காரணத்தை புலனாய்வு அமைப்புகள் கண்டறியும் என்றும் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.
November 11, 2025 1:54 PM IST


