Last Updated:
Delhi Red Fort Blast CCTV | டெல்லி செங்கோட்டை அருகே கார் குண்டுவெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
டெல்லியில் செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பின் புதிய சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
தலைநகர் டெல்லியில் செங்கோட்டை அருகே உள்ள மெட்ரோ ரயில் நிலையம் முன்பு கார் ஒன்று நேற்று மாலை திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதில் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நான்கு வாகனங்களும் எரிந்து சேதமடைந்தன. இந்த வெடி விபத்தில் 8 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். சுமார் 20 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 4 பேர் சிகிச்சைப்பலனின்றி இறந்தனர். இதனால், டெல்லி குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
இதற்கிடையே, குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடம் முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்கள், தேசிய புலனாய்வு முகமையினர், தேசிய பாதுகாப்பு படையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அமோனியம் நைட்ரேட் கலந்த எரிபொருள் எண்ணெய் மற்றும் டெட்டனேட்டர்கள் பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம் தற்கொலைப் படை தாக்குதலா என்ற கோணத்திலும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் டெல்லி கார் குண்டுவெடிப்பின் புதிய சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது. அதில் கார் வெடிப்பை தொடர்ந்து எழுந்த தீப்பிளம்பு சிசிடிவி காட்சியில் இடம்பெற்றுள்ளது. மேலும் அச்சத்தில் மக்கள் அலறியடித்து ஓடும் காட்சிகள் உள்ளது.
முன்னதாக டெல்லியில் குண்டு வெடிப்புக்கு அரை மணி நேரம் முன்பு காரை ஓட்டியவர் உமர் சுங்கச்சாவடியை கார் கடந்து சென்ற காட்சி சிசிடிவியில் பதிவான வீடியோ வெளியாகி இருந்தது.
Delhi,Delhi,Delhi
November 11, 2025 2:47 PM IST
Delhi Blast CCTV | டெல்லி கார் குண்டுவெடிப்பின் புதிய சிசிடிவி காட்சி… சத்தம் கேட்டதும் தப்பி ஓடிய மக்கள்…. திக் திக் நிமிடங்கள்!


