• Login
Saturday, March 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

டெல்லியில் மீண்டும் பரபரப்பு… முக்கிய பகுதியில் கேட்ட வெடிச்சத்தம் – என்ன நடந்தது? | இந்தியா

GenevaTimes by GenevaTimes
November 13, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
டெல்லியில் மீண்டும் பரபரப்பு… முக்கிய பகுதியில் கேட்ட வெடிச்சத்தம் – என்ன நடந்தது? | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:November 13, 2025 10:12 AM IST

டெல்லி செங்கோட்டை அருகே கார் குண்டுவெடிப்பில் 13 பேர் உயிரிழப்பு, உமர் நபி மற்றும் முஜாமில் தொடர்பு, Mahipalpur Radisson Hotel அருகே வெடிச்சத்தம் அதிர்ச்சி.

News18
News18

டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் டெல்லியில் இன்று காலை வெடிச்சத்தம் கேட்டிருப்பது உறுதியாகியுள்ளது.

தலைநகர் டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில், 13 பேர் உயிரிழந்த நிலையில், பலர் படுகாயமடைந்தனர். குண்டு வெடிப்பு சம்பவத்தின் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி வெளியானது. இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் மருத்துவர் உமர் நபி பயன்படுத்தியதாக கூறப்படும் ஈகோ ஸ்போர்ட் கார், ஹரியானாவின் Khandawali பகுதியில் சிக்கியது.

டெல்லி குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு முன்னர், அஷாப் அலி சாலையில் உள்ள மசூதியில் உமர் நபி தங்கியதும், அங்கிருந்து வெளியேறிய பின்னர் பார்க்கிங் பகுதியில் நீண்ட நேரம் காரை நிறுத்தியிருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனிடையே, ஃபரிதாபாத்தில் சுமார் 3 ஆயிரம் கிலோ வெடிபொருட்களை பதுக்கியதாக கைது செய்யப்பட்ட மருத்துவர் முஜாமிலின் செல்போனை ஆய்வு செய்ததில், அதன் சிக்னல் பலமுறை செங்கோட்டை பகுதியில் பதிவானது தெரியவந்துள்ளது.

அவர் தனது கூட்டாளியான உமர் நபியுடன், செங்கோட்டை பகுதிக்கு பலமுறை வந்தது அங்கிருந்த சிசிடிவிக்களில் பதிவாகி உள்ளது. கடந்த குடியரசு தினத்தன்று நடத்த இருந்த தாக்குதல் கடுமையான பாதுகாப்பு காரணமாக தோல்வியில் முடிந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இதற்கிடையே, டெல்லியில் மற்றொரு இடத்தில் வெடிச்சத்தம் கேட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை டெல்லியின் மஹிபால்பூர் பகுதியில் உள்ள ராடிசன் ஹோட்டல் அருகே வெடிச்சத்தம் கேட்டது. இந்த சம்பவம் குறித்து தீயணைப்பு படையினருக்கு காலை 9:18 மணிக்கு தகவல் கிடைத்தது, மேலும் காவல்துறையினர் சம்பவ இடத்தை அடைந்து அதற்கான காரணத்தை விசாரித்து வருகின்றனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. பாதிப்பு விவரம் குறித்து வெடிச்சத்தம் எதனால் கேட்டது என்பது தொடர்பான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
Location :

Delhi,Delhi,Delhi

First Published :

November 13, 2025 10:12 AM IST

Read More

Previous Post

மீண்டும் உச்சம் தொட்ட தங்க விலை : வாங்கவுள்ளோருக்கு முக்கிய அறிவிப்பு

Next Post

ஹசன் ஜாய் 169 ரன்கள் விளாசல்: வங்கதேசம் 338 ரன்கள் குவிப்பு | Hasan Joy Smashes 169 Runs as Bangladesh Pile Up 338 Runs

Next Post
ஹசன் ஜாய் 169 ரன்கள் விளாசல்: வங்கதேசம் 338 ரன்கள் குவிப்பு | Hasan Joy Smashes 169 Runs as Bangladesh Pile Up 338 Runs

ஹசன் ஜாய் 169 ரன்கள் விளாசல்: வங்கதேசம் 338 ரன்கள் குவிப்பு | Hasan Joy Smashes 169 Runs as Bangladesh Pile Up 338 Runs

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin