• Login
Wednesday, October 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

டெல்லியில் போராடிய இந்தியா கூட்டணி எம்.பிக்கள் மீது காவல்துறை தாக்குதல்? – குண்டுகட்டாக கைது செய்யப்பட்ட ராகுல் காந்தி! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 7, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
டெல்லியில் போராடிய இந்தியா கூட்டணி எம்.பிக்கள் மீது காவல்துறை தாக்குதல்? – குண்டுகட்டாக கைது செய்யப்பட்ட ராகுல் காந்தி! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 07, 2026 6:21 PM IST

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி டெல்லியில் போராடிய ராகுல் காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்.பி.க்களை காவல்துறை கைது செய்தது.

News18
News18

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் இரண்டாம் நாளாக இன்றும் போராட்டம் நடத்திய நிலையில், ஜந்தர் மந்தர் அருகே எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உட்பட எதிர்க்கட்சி எம்.பிக்களை காவல்துறை தடுத்து நிறுத்தி கைது செய்தது. இந்தச் சம்பவத்தின் போது தங்களை காவல்துறையினர் தாக்கியதாக போராட்டத்தில் ஈடுபட்ட சில எம்.பி.க்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், ஆணையத்தின் மற்ற இரண்டு ஆணையர்களின் ஒப்புதல் இல்லாமல் தனிச்சையாக முடிவுகளை எடுத்ததாக புகார்கள் எழுந்தன. குறிப்பாக எஸ்.ஐ.ஆர். விவகாரத்தில் ஞானேஷ் குமார் தனிச்சையாக செயல்பட்டதாக ஆணையத்தின் மற்ற இரண்டு ஆணையர்கள் புகார் எழுப்பி கடிதம் எழுதியதாகவும் தகவல் வெளியானது.

இதனைத் தொடர்ந்து ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும், அரசு அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும், அவர் மீது விசாரணை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள், கரப்பான்பூச்சி ஜனதா கட்சி, மாணவர்கள் அமைப்பு உள்ளிட்டவை டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றன.

அந்த வகையில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் தொடர் பேரணிகளை அறிவித்து நேற்று முதல் ஞானேஷ் குமாருக்கு எதிரான பேரணியையும், போராட்டத்தையும் தொடங்கின. நேற்று (6ஆம் தேதி), நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தேர்தல் ஆணையம் நோக்கி பேரணியாக சென்று, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைச் சந்திக்க திட்டமிட்டு, இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் காலை 10.30 மணிக்கு பேரணி தொடங்கினர். அப்படி தேர்தல் ஆணையம் நோக்கி சென்ற இந்தியா கூட்டணி எம்.பிக்களை ஆகாஷ்வானி வளாகத்தின் அருகேயே காவல்துறை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உட்பட போராட்டத்தில் ஈடுபட்ட இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் நேற்று கைது செய்யப்பட்டு, பின் விடுவிக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து இந்தியா கூட்டணி ஏற்கனவே முடிவு செய்தபடி இன்று மீண்டும் பேரணியை நடத்தினர். இந்தப் பேரணியில் ஜந்தர் மந்தர் நோக்கி சென்று, அங்கு போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டிருந்தது. இதற்காக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உட்பட இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பேரணியைத் தொடங்கி மேற்கொண்டனர்.

#WATCH | Delhi: Lok Sabha LoP Rahul Gandhi being detained by the Police near Jantar Mantar. INDIA bloc MPs say they were beaten up by the Police and stopped from moving towards the protest site.


(Video: Congress) https://t.co/AzUqdwDDe6

— ANI (@ANI) October 7, 2026

இந்நிலையில், இந்தியா கூட்டணி எம்.பிக்களை ஜந்தர் மந்தர் செல்வதற்கு முன்னதாக தடுத்து நிறுத்திய காவல்துறை, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உட்பட போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பி.க்களை கைது செய்தது. இந்தச் சம்பவத்தின் போது காவல்துறை தங்களை தாக்கியதாக இந்தியா கூட்டணி எம்.பிக்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

Read More

Previous Post

தமிழ்மிரரின் சிந்தனை சித்திரம்

Next Post

Property Rights | திருமணத்திற்கு பின் பெண் எத்தனை ஆண்டுகள் கழித்து சொத்துரிமை கோர முடியும்? சட்டம் சொல்வது என்ன? | வணிகம் போட்டோகேலரி

Next Post
Property Rights | திருமணத்திற்கு பின் பெண் எத்தனை ஆண்டுகள் கழித்து சொத்துரிமை கோர முடியும்? சட்டம் சொல்வது என்ன? | வணிகம் போட்டோகேலரி

Property Rights | திருமணத்திற்கு பின் பெண் எத்தனை ஆண்டுகள் கழித்து சொத்துரிமை கோர முடியும்? சட்டம் சொல்வது என்ன? | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin