ஜூன் 24-ல் கூடுகிறது மக்களவை
மாநிலங்களவை கூட்டத்தொடர் ஜூன் 24 ஆம் தேதி கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பிகள் ஜூன் 24 ஆம் தேதி பதவியேற்பார்க்ள. ஜூன் 24 முதல் ஜூலை 3 ஆம் தேதி வரை மக்களவை கூட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் தேர்தல் ஆணையரை சந்திக்கும் விஜய பிராபகர்
விருதுநகரில் மறு வாக்கு எண்ணிக்கை கோரி தேர்தல் ஆணையரை தேமுதிகவின் விஜய பிரபாகர் சந்திக்க உள்ளார். இன்று பிற்பகல் 3.30 மணிக்கு டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையரை விஜய பிரபாகர் சந்திக்க உள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை விட 4379 வாக்குகள் குறைவாக பெற்று விஜயபிராபகர் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடதக்கது.
ஆந்திராவில் பலத்து பாதுகாப்பு
சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி உட்பட 7 மாநில முதலமைச்சர்கள் பங்கேற்க உள்ளதால் விஜயவாடாவில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஆந்திரா முதல்வராகிறார் சந்திரபாபு நாயுடு
சந்திரபாபு நாயுடு ஆந்திர முதலமைச்சராக நான்காவது முறையாக இன்று காலை 11.27 மணிக்கு விஜயவாடாவில் பதவியேற்க உள்ளார். மேலும் துணை முதலமைச்சராக பவன் கல்யாண் பதவியேற்க உள்ளதாக தெரிகிறது.
- First Published :
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)