
Last Updated:
Delhi Election Schedule | டெல்லி சட்டப்பேரவை தேர்தல் மற்றும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
டெல்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம் அடுத்த மாதம் 23 ஆம் தேதி நிறைவடைகிறது. இந்த தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி, பா.ஜ.க, காங்கிரஸ் இடையே மும்முனைப் போட்டி நிலவி வருகிறது. 70 தொகுதிகளுக்கும் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், பா.ஜ.க சார்பில் 29 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிட்டது. தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில், இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 5 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் எனவும் பிப்ரவரி 8ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும் எனவும் தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
முன்னதாக ஜனவரி 10-ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம் எனவும் 17ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல மனு பரிசீலனை ஜனவரி 18-ம் தேதியும், ஜனவரி 20-ம் தேதி திரும்ப பெறுவதற்கான நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Delhi,Delhi,Delhi
January 07, 2025 3:45 PM IST

