இந்திய தலைநகர் புதுடெல்லியில் உள்ள இந்திய நிர்வாக சேவை (IAS) பயிற்சி மையத்தில் வெள்ளம் ஏற்பட்டதை தொடர்ந்து 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த மாதம் 27ஆம் தேதி (ஜூலை 2024) பயிற்சி மையம் அருகே கால்வாய் உடைந்து கல்லூரியின் தரை தளத்தில் வெள்ளம் புகுந்தது. இதில் சிக்கிய 3 மாணவர்கள் வெளியே வர முடியாமல் இறந்தனர்.