Last Updated:
அதிபர் டிரம்ப் – எலான் மஸ்க் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க அரசின் செலவினங்களை குறைப்பது தொடர்பான மசோதா விவகாரத்தில் அதிபர் டிரம்புக்கும், தொழிலதிபர் எலான் மஸ்க்-குக்கும் இடையே பகிரங்க மோதல் வெடித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்பின் வரிச் சலுகை மற்றும் செலவினங்களை குறைப்பது தொடர்பான மசோதாவை அவரது நெருங்கிய ஆதரவாளரும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன உரிமையாளருமான எலான் மஸ்க் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். குறிப்பாக புதிய மசோதாவில் மின்சார வாகனங்களுக்கான வரிச்சலுகை ரத்து செய்யப்பட்டதை கடுமையாக விமர்சித்தார்.
இந்நிலையில், தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அதிபர் டிரம்ப், நாட்டின் நிதியை சேமிப்பதற்கு எளிதான வழி எலான் மஸ்க்கின் நிறுவனத்திற்கான மானியங்கள் மற்றும் ஒப்பந்தங்களை நிறுத்துவதுதான் என்று குறிப்பிட்டுள்ளார். இதனால், கோபமடைந்த எலான் மஸ்க், நாசா விஞ்ஞானிகளை சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஸ்பேஸ் எக்ஸின் ‘டிராகன்’ விண்கலன் மூலம் அழைத்து செல்லும் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார். தனது ஆதரவு இல்லாமல் இருந்திருந்தால் டிரம்ப் அதிபர் தேர்தலில் தோற்றிருப்பார் என்றும் எலான் மஸ்க் பகிரங்கமாக விமர்சித்துள்ளார்.
மேலும், பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணத்தில் டிரம்பின் பெயர் இருப்பதாகவும், இதனால், தான் அந்த ஆவணம் பொதுவெளியில் வரவில்லை என்றும் எலான் மஸ்க் பதிவிட்டுள்ளார். இதனால், அதிபர் டிரம்ப் – எலான் மஸ்க் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
June 06, 2025 10:49 AM IST


