• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

டூப்ளிகேட் RC புத்தகம் பெற வேண்டுமா…? ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள்… | வணிகம்

GenevaTimes by GenevaTimes
August 25, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
டூப்ளிகேட் RC புத்தகம் பெற வேண்டுமா…? ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள்… | வணிகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 25, 2025 3:12 PM IST

RC புத்தகம் தொலைந்து போயிருந்தாலோ, திருடப்பட்டிருந்தாலோ, கிழிந்திருந்தாலோ அல்லது எரிந்திருந்தாலோ டூப்ளிகேட் RCக்கு விண்ணப்பிக்கலாம்.

Rapid Read
News18News18
News18

உங்கள் பைக் அல்லது காரின் RC அல்லது பதிவுச் சான்றிதழை தொலைத்துவிட்டால், இனி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. RC என்பது வாகனத்திற்கு மிக முக்கியமான ஆவணம், அது வாகனம் உங்கள் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை நிரூபிக்கிறது. இந்த ஆவணமானது பிராந்திய போக்குவரத்து அலுவலகத்தால் (RTO) வழங்கப்படுகிறது. RC இல்லாமல் வாகனம் ஓட்டுவது குற்றமாகக் கருதப்படுகிறது.

எனவே உங்கள் வாகனத்தின் அசல் RC தொலைந்து போனாலோ, சேதமடைந்தாலோ அல்லது தகவல்களைப் புதுப்பிக்க வேண்டியிருந்தாலோ, நீங்கள் டூப்ளிகேட் RCக்கு விண்ணப்பிக்கலாம். இது அசல் RCயைப் போலவே செல்லுபடியாகும். நீங்கள் புதிய RCயைப் பெற RTOக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. வீட்டிலிருந்தே புதிய RCயைப் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். படிப்படியான விவரங்கள் இதோ…

என்ன காரணங்களுக்காக டூப்ளிகேட் RC தேவைப்படுகிறது?

RC புத்தகம் தொலைந்து போயிருந்தாலோ, திருடப்பட்டிருந்தாலோ, கிழிந்திருந்தாலோ அல்லது எரிந்திருந்தாலோ டூப்ளிகேட் RCக்கு விண்ணப்பிக்கலாம். இதுதவிர பெயர், முகவரி போன்ற தகவல்களில் ஏற்படும் மாற்றத்தாலும் டூப்ளிகேட் RCக்கு விண்ணப்பிக்கலாம்.

முதலில் என்ன செய்வது?

  • உங்கள் RC தொலைந்துபோனாலோ அல்லது திருடப்பட்டாலோ, முதலில் அருகிலுள்ள காவல் நிலையத்தில் FIR பதிவு செய்வது அவசியமாகும். அதுமட்டுமின்றி, டூப்ளிகேட் RCக்கான விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படாது.
  • இதற்குப் பிறகு, RCஐ வழங்கிய RTOவிடம் சென்று, இது குறித்து எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்கவும்.
  • அதன்பிறகு, ஃபார்ம் 26ஐ நிரப்புவதன் மூலம் டூப்ளிகேட் RC-க்கு விண்ணப்பிக்கவும்.
  • டூப்ளிகேட் RC பெற மத்திய அரசின் விதிகளின்படி கட்டணம் செலுத்த வேண்டும்.
என்னென்ன ஆவணங்கள் தேவை?

டூப்ளிகேட் RCக்கு விண்ணப்பிக்க சில குறிப்பிட்ட ஆவணங்கள் தேவைப்படுகின்றன. அதாவது பூர்த்தி செய்யப்பட்ட ஃபார்ம் 26, FIR காப்பி, மாசுக்கட்டுப்பாட்டு சான்றிதழ், வாகனத்தின் வேலிட் இன்சூரன்ஸ் பேப்பர் ஆகியவற்றுடன் ஆதார் அட்டை, மின்சார பில் போன்ற முகவரிச் சான்றுடன் பான் கார்டின் காப்பி, RC தொலைந்து போனதற்கான பிரமாணப் பத்திரம் போன்றவை அடங்கும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

  • முதலில், பரிவஹன் சேவையின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்லவும்.
  • ஹோம் பக்கத்தில் உள்ள ஆன்லைன் சர்வீஸ் மெனுவிற்கு சென்று வெஹிகிள் ரிலேடட் சர்வீஸ் என்பதை செலக்ட் செய்யவும்
  • இப்போது உங்கள் வாகனம் பதிவு செய்யப்பட்டுள்ள மாநிலத்தை செலக்ட் செய்யவும்.
  • பின்னர் டூப்ளிகேட் RC என்ற ஆப்ஷனைக் கிளிக் செய்யவும்.
  • ஆன்லைன் படிவத்தை நிரப்பி, உங்கள் வாகனம் தொடர்பான ஆட்டோ ஃபில்டு இன்ஃபர்மேஷனை சரிபார்க்கவும்.
  • பரிந்துரைக்கப்பட்ட கட்டணத்தை ஆன்லைனில் செலுத்துங்கள் (கட்டணம் வாகனத்தின் வகையைப் பொறுத்தது).
  • விண்ணப்பத்திற்குப் பிறகு பெறப்பட்ட ரசீதை, தேவையான அனைத்து ஆவணங்களுடன் RTOவிடம் சமர்ப்பிக்கவும்.

சமீபத்திய வணிகச் செய்திகள், தனிப்பட்ட நிதி குறிப்புகள், தினசரி தங்கம் விலை பற்றிய அப்டேட்டுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

August 25, 2025 3:12 PM IST

Read More

Previous Post

‘அமைச்சர் நேரு 300 ஏக்கர் கோல்மால்.. 17 ஏக்கர் டிரஸ்ட் நிலம் மோசடி..’ திருச்சியில் அடுக்கிய இபிஎஸ்!

Next Post

பொந்தியானில் மற்றொரு கொடி தலைகீழாக காட்சிப்படுத்தன் தொடர்பில் போலீஸ் விசாரணை | Makkal Osai

Next Post
பொந்தியானில் மற்றொரு கொடி தலைகீழாக காட்சிப்படுத்தன் தொடர்பில் போலீஸ் விசாரணை | Makkal Osai

பொந்தியானில் மற்றொரு கொடி தலைகீழாக காட்சிப்படுத்தன் தொடர்பில் போலீஸ் விசாரணை | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin