• Login
Saturday, August 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

டீப்சீக், சாட்ஜிபிடி-க்கு போட்டியாக புதிய ஏஐ மாடலை அறிமுகம் செய்தது அலிபாபா | Alibaba Launches New AI Model; Claims It Can Beat DeepSeek, ChatGPT, Llama

GenevaTimes by GenevaTimes
January 29, 2025
in உலகம்
Reading Time: 5 mins read
0
டீப்சீக், சாட்ஜிபிடி-க்கு போட்டியாக புதிய ஏஐ மாடலை அறிமுகம் செய்தது அலிபாபா | Alibaba Launches New AI Model; Claims It Can Beat DeepSeek, ChatGPT, Llama
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


டீப்சீக்கின் ஏஐ, ஓப்பன்ஏஐ-யின் ஜிபிடி-4o மற்றும் மெட்டா நிறுவனத்தின் லாமா ஏஐ-க்கு போட்டியாக அலிபாபா நிறுவனம் தனது ஏஐ மாடலின் குவென்2.5- மேக்ஸ் என்ற புதிய பதிப்பை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அலிபாபாவின் கிளவுட் டிவிஷன் வெளியிட்ட அறிக்கையில்” ஓப்பன் ஏஐ, மெட்டா நிறுவனங்களின் ஜிபிடி-4o, லாமா 3.1-405பி, டீப்சீக்-வி3 ஆகிய ஏஐ மாடல்களுடன் ஒப்பிடும்போது குவென்2.5 -மேக்ஸ் செயல்பாடு மிகச் சிறப்பானதாக உள்ளது” என்று தெரிவித்துள்ளது.

டீப்சீக் நிறுவனம் தொடங்கி 20 மாதங்கள் மட்டுமே ஆன நிலையில், குறைந்த விலை, அதிக செயல்திறன் கொண்ட ஏஐ மாடல்களை அறிமுகம் செய்ததால் சர்வதேச சந்தையில் அதன் மதிப்பு வெகுவாக உயர்ந்துள்ளது. அதேநேரம், அமெரிக்காவைச் சேர்ந்த ஏஐ நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பு கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

டீப்சீக் நிறுவனத்தின் புதிய ஏஐ மாடல் ஓப்பன்ஏஐ, மெட்டா நிறுவனங்களில் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் அலிபாபா தனது புதிய ஏஐ மாடல் குறித்த அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.

சீன ஏஐ நிறுவனங்களின் இந்த அடுத்தடுத்த அறிவிப்புகளால் இத்துறையில் ஏற்கெனவே கோலோச்சியுள்ள அமெரிக்க நிறுவனங்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் அவர்கள் தங்களது வியூங்களை மறு ஆய்வு செய்யும் நிலைக்கும் தள்ளியுள்ளது.

சமீபத்தில் டீப்சீக் ஏஐ நிறுவனத்தின் வெற்றியை ஒப்புக்கொண்ட ஓப்பன்ஏஐ நிறுவனத்தின் சிஇஓ சாம் ஆல்ட்மேன், அதன் முன்னேற்றம் சுவாரசியமானது என்றார். இந்த கடும்போட்டிக்கு இடையில், எதிர்காலத்தில் இன்னும் மேம்பட்ட ஏஐ மாடல்களை உருவாக்குவதில் ஓபன்ஏஐ அதிக கவனம் செலுத்தி வருவதாக அவர் அப்போது குறிப்பிட்டார்.



Read More

Previous Post

மகாகும்பமேளாவில் குவிந்த 10 கோடி பக்தர்கள்.. நெரிசல் ஏற்பட்டது எப்படி?

Next Post

தெற்கு சூடானில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 18 பேர் பலி | Makkal Osai

Next Post
தெற்கு சூடானில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 18 பேர் பலி | Makkal Osai

தெற்கு சூடானில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 18 பேர் பலி | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin