Last Updated:
கடைசி 2 பந்துகளில் 4 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்ட போது முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து மேக்ஸ்வெல் அணியை வெற்றி பெற வைத்தார்
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கிளென் மேக்ஸ்வெல் அணியை வெற்றி பெற வைத்தார். முந்தைய போட்டிகளில் திணறிக் கொண்டிருந்த அவர் இந்த மேட்ச் மூலமாக அதிரடியாக கம்பேக் கொடுத்து அசத்தியுள்ளார்.
தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி முடித்துள்ளது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவும் இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்காவும் வெற்றி பெற்றிருந்த நிலையில் மூன்றாவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 172 ரன்கள் குவித்தது. இதை அடுத்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலியா அணி 1 பந்து மட்டும் மீதம் இருந்த நிலையில் மூன்று விக்கெட்டுகள், 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கடைசி 2 பந்துகளில் 4 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்ட போது முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து மேக்ஸ்வெல் அணியை வெற்றி பெற வைத்தார். இந்த போட்டியில் 36 பந்துகளை எதிர்கொண்ட அவர் 2 சிக்சர் மற்றும் 8 பவுண்டரியுடன் 62 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார். இதன் மூலம் அவர் சூரியகுமார் யாதவின் சாதனை ஒன்றை முறியடித்துள்ளார்.
இந்த வெற்றியின் மூலமாக ஆஸ்திரேலியா அணி 2-1 என்ற கணக்கில், தொடரை வென்றது. இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் டெவால்ட் ப்ரூவிஸ் கேட்சை மேக்ஸ்வெல் பிடித்தார். இது அவரது 62 ஆவது கேட்ச் ஆகும். இதன் மூலம் அதிக கேட்சுகளை பிடித்த வீரர் என்ற லிஸ்டில் டேவிட் வார்னருடன் இணைந்துள்ளார்.
மேலும் டி20 போட்டிகளில் அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் சூர்யா குமார் யாதவ் ரெக்கார்டை முறியடித்துள்ளார். சூர்யா குமார் யாதவ் 146 சிக்சர்கள் அடித்துள்ள நிலையில் மேக்ஸ்வெல் 148 சிக்சர்கள் விளாசி இருக்கிறார்.
August 17, 2025 9:49 PM IST


