டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடி வரும் இந்திய அணியில் இருந்து 2 முக்கிய வீரர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
டி20 உலகக் கோப்பை தொடரில் அமெரிக்காவில் நடைபெற்று வரும் லீக் போட்டிகள் நிறைவடையும் நிலையில், வரும் புதன் கிழமையில் இருந்து சூப்பர் 8 சுற்றுப் போட்டிகள் மேற்கு இந்திய தீவுகளில் நடைபெறவுள்ளன. இந்நிலையில், இந்திய அணியில் இடம்பெற்றுள்ள இரண்டு முக்கிய வீரர்கள் நாடு திரும்புகின்றனர்.
குறிப்பாக, பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின்போது இந்திய வீரர்கள் அனைவரும், மைதானத்தில் இருந்தபோது, ஆடும் லெவனில் இடம்பெறாத சுப்மன் கில், அந்த போட்டியை காண மைதானத்திற்கு கூட வரவில்லை.
இந்த நிலையில், சூப்பர் 8 சுற்றுகளில் இந்திய அணி பங்கேற்க உள்ள நிலையில், சுப்மன் கில் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஆவேஷ் கான் ஆகியோர் நாடு திரும்பியுள்ளனர். இது ஏற்கெனவே எடுக்கப்பட்ட முடிவு என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ஏனெனில், சுப்மன் கில் மற்றும் ஆவேஷ் கான் இருவரும் ரிசர்வ் வீரர்களாகவே டி20 உலகக் கோப்பை தொடருக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அதுவும் லீக் சுற்றுப் போட்டிகள் வரை மட்டுமே அவர்கள் அங்கு இருப்பார்கள் என்று ஏற்கெனவே அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் பிசிசிஐ கூறியுள்ளது.
இதையும் படிக்க:
இங்கிலாந்துக்கு உதவிய ஆஸ்திரேலியாவின் வெற்றி… 2 அணிகளும் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற்றம்!
முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டபடி, அவர்கள் தற்போதைய அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், கேப்டன் ரோகித் சர்மா அல்லது நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு காயம் ஏற்பட்டால், ஏற்கெனவே உள்ள 15 பேர் கொண்ட அணியில் இருக்கும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறக்கப்படலாம் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. அத்துடன் சூப்பர் 8 சுற்றில், நான்காவது தொடக்க ஆட்டக்காரர் தேவையில்லை என்றும் கூறியுள்ளது.
டி20 உலகக் கோப்பை தொடருக்கு தேர்வு செய்யப்பட்ட இந்திய அணியில் 4 வீரர்கள் கூடுதலாக தேர்வு செய்யப்பட்டனர். பேட்ஸ்மேன்களாக சுப்மன் கில், ரிங்கு சிங் ஆகியோரும், பந்து வீச்சாளர்களாக ஆவேஷ் கான் மற்றும் கலீல் அகமது ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர். தற்போது சுப்மன் கில் மற்றும் ஆவேஷ் கான் நாடு திரும்பியுள்ள நிலையில், ரிங்கு சிங் மற்றும் கலீல் அகமது ஆகியோர் அணியில் இன்னும் தொடர்கின்றனர்.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)