டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி தொடர்ந்து வெற்றிபெற்று வரும் நிலையில், முக்கியமான 2 வீரர்கள் தொடர்ந்து சொதப்பி வருவது ரசிகர்களை எரிச்சலடைய வைத்துள்ளது.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி பிரேக் இல்லாத வாகனம், எதிரே யார் வந்தாலும் மோதிவிட்டு போவதைப் போல, இந்திய அணியும் எதிரே எந்த அணி வந்தாலும் அவர்களை வீழ்த்தி, வெற்றியை வசமாக்கி வருகிறது. இதன் மூலம் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள இந்திய அணி, நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை 68 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
கேப்டன் ரோகித் சர்மா 39 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்சர் உடன் 57 ரன்கள் எடுத்தார். சூர்யகுமார் யாதவ் 36 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்சர் உடன் 47 ரன் எடுத்தார். ஹர்திக் பாண்டியா 13 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்சர் உடன் 23 ரன்கள் எடுத்தார். முக்கிய வீரர்கள் ரன் குவித்த அதே நேரத்தில், இந்திய பந்து வீச்சாளர்கள் அக்ஷர் படேல் 23 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டையும், குல்தீப் யாதவ் 19 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டையும், பும்ரா 12 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டையும் வீழ்த்தி அபார வெற்றிக்கு வித்திட்டனர்.
இங்கிலாந்து அணியில் கேப்டன் ஜோஸ், ஹாரி புரூக், ஆர்ச்சரை தவிர மற்ற வீரர்கள் பெரிதாக ரன் எடுக்கவில்லை. இதனால், அந்த அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து வெளியேறியது. இதனால், மகிழ்ச்சி அடைந்துள்ள இந்திய ரசிகர்கள் 2022 டி20 உலகக் கோப்பை அரையிறுதி தோல்விக்கு இந்திய அணி பழி வாங்கிவிட்டதாக கொண்டாடி வருகின்றனர்.
இதையும் படிக்க:
ஆனந்த கண்ணீர் வடித்த ரோகித் சர்மா… தட்டிக் கொடுத்து கொண்டாடிய விராட் கோலி!
இருப்பினும், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் முதல் ரசிகர்கள் வரை அதிக நம்பிக்கை வைத்துள்ள 2 வீரர்கள் தொடர்ந்து சொதப்பி வருவது, பலரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. இதில் முக்கியமான முதல் நபர், இந்திய அணியின் ரன் மெஷின் விராட் கோலி. டி20 உலகக் கோப்பை என்ற முக்கியமான தொடரில் தொடர்ந்து தோல்வி அடைந்து வருகிறார். இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் 75 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதில் ஒரு அரை சதம் கூட இல்லை.
விராட் கோலியின் கேரியரில் இது மிகவும் மோசமான உலகக் கோப்பை தொடர் என்றுதான் சொல்ல வேண்டும். நேற்று நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அவர் வெறும் 9 ரன்கள் மட்டுமே எடுத்தார். அண்மையில் நடந்து முடிந்து ஐபிஎல் தொடரில் தொடர்ந்து அசத்தி வந்த கோலி, 700 ரன்களுக்கு மேல் குவித்து ஆரஞ்சு தொப்பை கைப்பற்றினார்.
அவரைப் போலவே பெரிதும் நம்பப்பட்ட வீரர் ஷிவம் துபே. இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் ஷிவம் துபே டக் அவுட் ஆனார். இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் 7 போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 106 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இவரும் கடந்த ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதையும் படிக்க:
ஒரே ஓவரில் 43 ரன்கள்.. 134 ஆண்டுக்கால கிரிக்கெட்டில் மோசமான சாதனை – வீடியோ
இதனால், விராட் கோலி, ஷிவம் துபே மீது ரசிகர்கள் கடும் கோபத்தில் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடிய இருவரும், தேசிய அணியில் ஏன் இவ்வளவு மோசமாக விளையாடுகிறார்கள் என கோபத்தை கொட்டி வருவதோடு, இருவரும் மீண்டும் போய் ஐபிஎல் போட்டியிலேயே விளையாடுங்கள் என்று கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)