• Login
Sunday, February 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

டி20 உலகக் கோப்பை ஒளிபரப்பு… ஜியோ ஸ்டாருக்கு தடுப்பு அதிகாரம் வழங்கி உத்தரவு! | Sports News (விளையாட்டு செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
January 30, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
டி20 உலகக் கோப்பை ஒளிபரப்பு… ஜியோ ஸ்டாருக்கு தடுப்பு அதிகாரம் வழங்கி உத்தரவு! | Sports News (விளையாட்டு செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jan 30, 2026 2:26 PM IST

ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஐசிசி அண்டர் 19 ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் மற்றும் ஐசிசி ஆண்கள் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் ஆகிய இரு தொடர்களுக்கும் ஜியோ ஸ்டார் தான் இந்தியாவில் தனிப்பட்ட உரிமை பெற்ற ஒளிபரப்பாளர் என அங்கீகரித்தது.

News18
News18

ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை 2026 தொடரை ஒளிபரப்பும் சட்டவிரோத ஸ்ட்ரீமிங் தளங்களுக்கு எதிராக ஜியோ ஸ்டாருக்கு (JioStar) டெல்லி உயர்நீதிமன்றம் உடனடி தடுப்பு அதிகாரம் வழங்கியுள்ளது.

ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை 2026 தொடர்பான கிரிக்கெட் உள்ளடக்கங்களை சட்டவிரோதமாக ஸ்ட்ரீம் செய்து வந்த ‘ரோக்’ (rogue) இணையதளங்களை உடனடியாகவும் ரியல் டைம் முறையிலும் தடுக்க டெல்லி உயர்நீதிமன்றம் ஜியோ ஸ்டார் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு ஆதரவாக அதிகாரம் வழங்கியுள்ளது.

இந்த உத்தரவின் மூலம், ஜியோ ஸ்டாருக்கு உரிய தனிப்பட்ட ஒளிபரப்பு மறுபதிப்பு உரிமைகளை மீறி செயல்படும் இணையதளங்களை உடனடியாக தடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றம், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுடன் செய்யப்பட்ட ஊடக உரிமை ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஐசிசி அண்டர் 19 ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் மற்றும் ஐசிசி ஆண்கள் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் ஆகிய இரு தொடர்களுக்கும் ஜியோ ஸ்டார் தான் இந்தியாவில் தனிப்பட்ட உரிமை பெற்ற ஒளிபரப்பாளர் என அங்கீகரித்தது.

இந்த உரிமைகளில் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஒளிபரப்பு மற்றும் ஸ்ட்ரீமிங் உரிமைகள் அடங்கும். இவை ஜியோ ஸ்டாரின் ஒளிபரப்பு சேனல்கள் மற்றும் அதன் ஓடிடி தளம் ஜியோ ஹாட்ஸ்டார் மூலம் பயன்படுத்தப்படுகின்றன. சட்டவிரோதமாக உள்ளடக்கம் பரப்பப்படுகின்றது என்பதற்கான தெளிவான ஆதாரங்களையும், விளையாட்டு நிகழ்வுகள் நேரடி மற்றும் காலவரையறை கொண்டவை என்பதையும் கருத்தில் கொண்டு, ரோக் இணையதளங்கள் திட்டமிட்ட மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் உரிமை மீறல்களில் ஈடுபடுகின்றன என்றும், தடை செய்யப்பட்ட பின்னரும் mirror மற்றும் redirect டொமைன்கள் மூலம் மீண்டும் தோன்றுகின்றன என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.

இத்தகைய தளங்களை தடுக்க தாமதமானால் வருவாய் இழப்பு, தனிப்பட்ட உரிமைகளின் மதிப்பு குறைதல் ஏற்படும் என நீதிமன்றம் தீர்மானித்தது. இதனைத் தொடர்ந்து, தொலைத்தொடர்பு துறை மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஆகியவை, ஜியோ ஸ்டாருக்கு வழங்கும் தகவலின் அடிப்படையில், குறித்த ரோக் இணையதளங்களை உடனடியாகத் தடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. முக்கியமாக, இந்த உத்தரவு டைனமிக் மற்றும் real-time enforcement-ஐ அனுமதிக்கிறது. அதாவது, போட்டிகள் நடைபெறும் காலகட்டத்தில் புதிதாக கண்டறியப்படும் எந்த சட்டவிரோத ஸ்ட்ரீமிங் இணையதளங்களையும், ஒவ்வொரு முறையும் புதிய நீதிமன்ற நடவடிக்கை இன்றி, ஜியோ ஸ்டாருக்கு அளிக்கும் தகவலின் அடிப்படையில் உடனடியாகத் தடுக்க முடியும்.

மேலும், பைரஸி தொடர்பான வழக்குகளில் வழங்கப்படும் தடையுத்தரவுகள் பயனுள்ளவை, இயக்கத்தன்மை கொண்டவை மற்றும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப செயல்படக்கூடியவை ஆக இருக்க வேண்டும் என நீதிமன்றம் மீண்டும் வலியுறுத்தியது. குறிப்பாக, உள்ளடக்கம் நேரடியாக உருவாக்கப்பட்டு அதே நேரத்தில் சட்டவிரோதமாக பகிரப்படும் சூழலில், இந்த உத்தரவு, இந்தியாவின் டிஜிட்டல் பைரஸி எதிர்ப்பு கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவதோடு, சட்டப்படி நடைபெறும் விளையாட்டு ஒளிபரப்பு சூழலின் நம்பகத்தன்மையையும் பாதுகாக்கும் ஒரு முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.

Location :

Chennai [Madras],Chennai,Tamil Nadu

Read More

Previous Post

dollar exachange rate

Next Post

Silver Price | பட்ஜெட்டிற்கு பிறகு வெள்ளி விலை குறையுமா? ஆனந்த் சீனிவாசன் கணிப்பு..!

Next Post
Silver Price | பட்ஜெட்டிற்கு பிறகு வெள்ளி விலை குறையுமா? ஆனந்த் சீனிவாசன் கணிப்பு..!

Silver Price | பட்ஜெட்டிற்கு பிறகு வெள்ளி விலை குறையுமா? ஆனந்த் சீனிவாசன் கணிப்பு..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin