டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் – அமெரிக்கா அணிகள் இன்று மோதும் நிலையில், பிளேயிங் லெவனில் இடம்பெறப் போவது யார் என்பதை பார்க்கலாம்.
டி20 உலகக் கோப்பை தொடரில் ஏ குரூப்பில் இடம்பிடித்துள்ள பாகிஸ்தான், அமெரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவுள்ளது. அண்மையில், பாகிஸ்தான் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 4 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் மற்றும் மூன்றாவது போட்டிகள் மழையால் கைவிடப்பட்ட நிலையில், எஞ்சிய இரண்டு போட்டிகளிலும் பாகிஸ்தான் 0-2 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.
எனவே, நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் வெற்றியை குவிக்க பாகிஸ்தான் வீரர்கள் ஆயத்தமாகி வருகின்றனர். எனவே, முகமது ரிஸ்வான் மற்றும் பாபர் ஆசம் ஆகியோர் அணியில் நிச்சயம் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் பல்வேறு போட்டிகளில் சொதப்பிய ஆசம் கான் நாற்காலியில் அமரவைக்கப்பட வாய்ப்புள்ளது. இமாத் இல்லாததால், பேட்டிங்கில் பலத்தை கூட்ட அப்பாஸ் அப்ரிடிக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். அதேபோல், உஸ்மான் கான் மற்றும் இப்திகார் அகமது ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படும்.
ஷதாப் கான் தொடர்ச்சியாக சொதப்பி வந்தாலும், அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவே அதிக வாய்ப்புள்ளது. பந்து வீச்சாளர்களை பொறுத்தவரை அப்ரார் அகமது பாகிஸ்தான் அணியில் முக்கிய சுழற்பந்து வீச்சாளர் என்பதால், அவர் தக்கவைக்கப்பட வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் நசீம் ஷா, ஹாரிஸ் ரவுஃப், ஷாஹீன் அப்ரிடி ஆகிய பந்து வீச்சாளர்களும் இடம்பெறுவார்கள். எனவே, பாகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவனில் விளையாடும் வாய்ப்பு இருக்கும் வீரர்களை பார்க்கலாம்.
பாபர் ஆசம் (கேப்டன்), முகமது ரிஸ்வான், உஸ்மான் கான், ஃபகார் ஜமான், ஷதாப் கான், இப்திகார் அகமது, ஷாஹீன் அப்ரிடி, நசீம் ஷா, அப்பாஸ் அப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப், அப்ரார் அகமது. அமெரிக்க அணியின் உத்தேச பிளேயிங் லெவன்: ஸ்டீவன் டெய்லர், மோனாங்க் படேல் (கேப்டன்), ஆண்ட்ரிஸ் கஸ், ஆரோன் ஜோன்ஸ், கோரி ஆண்டர்சன், நிதிஷ்குமார், ஹர்மீத் சிங், ஷாடில் வான் ஷால்க்விக், ஜஸ்தீப் சிங், சவுரப் நேத்ரவால்கர், அலிகான்.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)