Last Updated:
ஜனவரி 24 ஆம் தேதி அன்று, பாதுகாப்பு காரணங்களுக்காக வங்கதேசம் இந்தியாவில் போட்டிகளில் விளையாட மறுத்ததை அடுத்து, ஐ.சி.சி., வங்கதேசத்திற்குப் பதிலாக ஸ்காட்லாந்தை குரூப் சி-யில் சேர்த்தது.
2026 டி20 உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்பே சர்ச்சைகள் நீண்டு கொண்டிருக்கின்றன. பாகிஸ்தான் போட்டியில் இருந்து விலகுவதாக அச்சுறுத்தி வருகிறது, அதே நேரத்தில் ஐசிசி ஏற்கனவே ஒரு மாற்றுத்திட்டத்தை வகுத்துள்ளது. பாகிஸ்தான் விலக முடிவு செய்தால், வங்கதேசம் அதன் இடத்தில் குரூப் ஏ-வில் விளையாட வாய்ப்பு வழங்கப்படும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழ்நிலையில், வங்கதேசம் தனது கோரிக்கையின்படி, தனது அனைத்து போட்டிகளையும் இலங்கையில் விளையாடும்.
பாதுகாப்பு காரணங்களை மேற்கோள் காட்டி, வங்கதேசம் தனது அனைத்து போட்டிகளையும் இலங்கையில் விளையாட வாய்ப்பு வழங்கப்படும். பாகிஸ்தான் போட்டியில் இருந்து விலகிய பிறகு ஏற்பட்ட மாற்றமான சூழ்நிலையாக ஐ.சி.சி இதை முழு உலகிற்கும் முன்வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்கும் டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பது குறித்த இறுதி முடிவை பாகிஸ்தான் குறைந்தபட்சம் வெள்ளிக்கிழமை வரை ஒத்திவைத்துள்ளது.
ஜனவரி 24 ஆம் தேதி அன்று, பாதுகாப்பு காரணங்களுக்காக வங்கதேசம் இந்தியாவில் போட்டிகளில் விளையாட மறுத்ததை அடுத்து, ஐ.சி.சி., வங்கதேசத்திற்குப் பதிலாக ஸ்காட்லாந்தை குரூப் சி-யில் சேர்த்தது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வி, பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்பைச் சந்தித்த பிறகு, வெள்ளிக்கிழமை அல்லது அடுத்த திங்கட்கிழமை டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பது குறித்து வாரியம் இறுதி முடிவை எடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.
அவர் தனது எக்ஸ் பக்கத்தில், நான் பிரதமருடன் நீண்ட நேரம் சந்தித்து ஐ.சி.சி விவகாரம் குறித்து விளக்கினேன். அனைத்து விருப்பங்களையும் பரிசீலித்து அதைத் தீர்க்குமாறு அவர் எங்களுக்கு உத்தரவிட்டார். வெள்ளிக்கிழமை அல்லது அடுத்த திங்கட்கிழமை இறுதி முடிவு எடுக்கப்படும் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது என்று பதிவிட்டுள்ளார்.
டி20 உலகக் கோப்பைக்கு பாகிஸ்தான் அணி அணி பங்கேற்கும் சூழல் உள்ளதா, பிப்ரவரி 15 அன்று இந்தியாவுக்கு எதிரான போட்டியைப் புறக்கணிப்பது உள்ளிட்ட பல சூழ்நிலைகள் குறித்து பிரதமருக்கு விளக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பிப்ரவரி 7 ஆம் தேதி கொழும்பில் நெதர்லாந்துக்கு எதிராக பாகிஸ்தான் தனது டி20 உலகக் கோப்பை போட்டியை தொடங்கும், அதைத் தொடர்ந்து அமெரிக்கா (பிப்ரவரி 10), இந்தியா (பிப்ரவரி 15) மற்றும் நமீபியா (பிப்ரவரி 18) அணிகளுக்கு எதிரான போட்டிகள் நடைபெறும் என்று அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ளது.


