• Login
Sunday, March 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக இல்லை: மனம் திறக்கும் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் | not happy with team fitness india coach gautam gambhir t20 world cup

GenevaTimes by GenevaTimes
November 11, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
டி20 உலகக் கோப்பைக்கு தயாராக இல்லை: மனம் திறக்கும் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் | not happy with team fitness india coach gautam gambhir t20 world cup
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: உடற்​ தகு​தி விஷ​யத்​தை பொறுத்​தவரை டி20 உலகக்​ கோப்​பை தொடருக்​கு இந்​தி​ய கிரிக்​கெட்​ அணி இன்​னும்​ தயா​ராக​வில்​லை என பயிற்​சி​யாளர்​ கவுதம்​ கம்​பீர்​ தெரி​வித்​துள்​ளார்​.

இதுதொடர்பாக கவுதம் கம்​பீர் பிசிசிஐ.டிவி இணை​யதளத்​துக்கு அளித்​துள்ள பேட்​டி​யில் கூறி​யிருப்​ப​தாவது: வீரர்​களின் ஓய்​வறை வெளிப்​படை​யாக​வும் நேர்​மறை​யான இடமாக​வும் அமைந்​துள்​ளது. இது இப்​படி​தான் இருக்க வேண்​டும் என நாங்​கள் விரும்​பு​கிறோம். டி20 உலகக் கோப்பை தொடர் அடுத்த ஆண்டு நடை​பெற உள்ள நிலை​யில் உடற்​தகு​தி​யைப் பொறுத்​தவரை நாங்​கள் இன்​னும் இருக்க விரும்​பும் இடத்தில் இல்லை என்றே நினைக்​கிறேன். இதுதொடர்​பாக அணி வீரர்​களு​டன் உரை​யாடி உள்​ளேன். இந்த விஷ​யத்​தில் உறு​தி​யாக இருக்க விரும்​பு​கிறோம்.

வீரர்​கள் அனை​வரும் உடற்​தகு​தி​யுடன் இருக்க வேண்​டும் என விரும்​பு​கிறோம். நாம் உடல் ரீதி​யாக வலிமை​யாக இருந்​தால், மன ரீதி​யாக​வும் உறு​தி​யானவர்​களாக மாறுகிறோம். உயர் அழுத்த சூழ்​நிலைகளில், உடல் தகுதி நேரடி​யாக நமது மன உறு​திக்கு பங்​களிக்​கிறது, இது மிக முக்​கிய​மான நேரங்​களில் சிறப்​பாக செயல்பட அனு​ம​திக்​கிறது. உலகக் கோப்பை தொடருக்கு இன்​னும் 3 மாதங்​கள் உள்​ளன. அதற்​குள் நாங்​கள் விரும்​பும் இடத்​தில் இருக்க வேண்​டும்.

ஏராள​மானோர் தற்​போதைய இந்​திய டி20 அணியை ஆக்​ரோஷ​மான பேட்​டிங் வரிசை​யாகக் கருதுகிறார்​கள். என்னை பொறுத்​தவரை​யில் பந்​து​வீச்​சில் ஆசிய கோப்பை தொடரில் முதல் 6 ஓவர்​களில் ஜஸ்​பிரீத் பும்​ராவை 3 ஓவர்​கள் வீசச் செய்​ததே ஆக்​ரோஷ​மான செய​லாக நினைக்​கிறேன். ஆக்​ரோஷ​மான பேட்​டிங் வரிசையை கொண்ட அணி என்று மட்​டுமே அழைக்​கப்​படும் அணி​யாக நாங்​கள் இருக்க விரும்​ப​வில்​லை, ஒட்​டுமொத்​த​மாக அனைத்து துறை​யிலும் ஆக்​ரோஷ​மான அணி​யாக இருக்க விரும்​பு​கிறோம்.

பவர்​பிளே​வில் பும்ரா 3 ஓவர்​களை வீசச் செய்​தது நல்ல பலனை கொடுத்​தது. பெரும்​பாலான நேரங்​களில் பவர்​பிளே​வில் வெற்​றிகர​மாக செயல்​பட்​டோம். மேலும் நடுஓவர்​களில் வருண் சக்​ர​வர்த்​தி, குல்​தீப் யாதவ் சுதந்​திர​மாக பந்​து​வீச​வும், விக்​கெட்​களை வீழ்த்​த​வும் அதிக வாய்ப்​பு​களை கொடுத்​தது. ஆல்​ர​வுண்​டர்கள் அணி​யில் அதி​கம் இருப்​பது மிக​வும் முக்​கி​யம். கடந்த காலங்​களில் பந்​து வீச்சு தேர்​வில் 6 பேர் மட்​டுமே இருந்தனர். ஆனால் தற்​போது 7 அல்​லது 8 பேர் உள்​ளனர்.

வாஷிங்​டன் சுந்​தரும், அக்​சர் படேலும் துணைக் கண்​டங்​களில் மட்​டும் சிறப்​பாக செயல்​படும் திறமை கொண்​ட​வர்​கள் கிடை​யாது. அனைத்து இடங்​களி​லும் சிறப்​பாக செயல்​படும் திறன் அவர்​களிடம் உள்​ளது. இதனால் தான், கடந்த 7 அல்​லது 8 மாதங்​களில் வாஷிங்​டன் சுந்​தரின் பந்​து​

வீச்சு பெரிய வெற்​றி​யாக அமைந்​துள்​ளது.

அக்​சர் படேல் சாம்​பியன்ஸ் டிராபி​யில் 5-வது இடத்​தில் பொறுப்​புடன் பேட்​டிங் செய்​தார். விதி​விலக்​காக அவர், சிறப்​பாக செயல்​பட்​டார், பந்​து​வீச்​சில் கடின​மான ஓவர்​கள் வீசி​னார். பவர்​பிளே மற்​றும் நடு ஓவர்களி​லும் பந்து வீசி​னார்​. இவ்​வாறு கவுதம்​ கம்​பீர்​ கூறி​யுள்​ளார்.



Read More

Previous Post

பிஹார் சட்டப்பேரவை தேர்தல்: காலை 9 மணி நிலவரப்படி 14.55% வாக்குப்பதிவு | Bihar records 14.55% turnout till 9 am in second phase of assembly polls

Next Post

Gold Rate: தொடர்ந்து மாற்றம் காணும் தங்கத்தின் விலை – கடந்த ஐந்து நாட்களின் விலை நிலவரம் என்ன தெரியுமா.?

Next Post
Gold Rate: தொடர்ந்து மாற்றம் காணும் தங்கத்தின் விலை – கடந்த ஐந்து நாட்களின் விலை நிலவரம் என்ன  தெரியுமா.?

Gold Rate: தொடர்ந்து மாற்றம் காணும் தங்கத்தின் விலை - கடந்த ஐந்து நாட்களின் விலை நிலவரம் என்ன தெரியுமா.?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin